உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் / 27

"குழந்தாய்! கடுகு எங்கே?”

"கொண்டுவரவில்லை. கிடைக்கவில்லை.

“ஏன்?”

66

وو

‘பகவரே நான் மட்டுந்தான் என் குழந்தையைப் பறிகொடுத்தேன் என்று தவறாக எண்ணினேன். என் குழந்தைமேல் இருந்த அன்பினாலே, இறந்த குழந்தையைப் பிழைக்கவைக்க மருந்து இருக்கும் என்றும் தவறாக எண்ணினேன். தாங்கள் என்னுடைய மனநோய்க்கு உண்மை யான மருந்து கொடுத்துப் போக்கிவிட்டீர்கள். உலகத்திலே சாகாதவர் ஒருவரும் இலர். (கணக்கெடுத்தால் செத்தவர் தொகைதான் மிகுதி, சாகாதவர் தொகை குறைவாக இருக்கும்.) குடும்பந்தோறும் நாடு தோறும், ஊர்தோறும் இருக்கிறவர் தொகையைவிட, இறந்தவர் தொகைதான் அதிகம் என்பதை அறிந்து கொண்டேன்.'

99

கௌதமை இயற்கைச் சட்டத்தை அறிந்து கொண்டது மட்டும் அல்லாமல் அதற்கு மேற்பட்ட நல்ஞானத்தையடையும் செவ்வியடைந் திருப்பதையும் பகவன் புத்தர் அறிந்தார். ஆகவே அவர் இவ்வாறு அருளிச்செய்தார்:

66

சாவு என்பது உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள நீக்க முடியாத சட்டம். அதனை மீறமுடியாது. இயமன் என்னும் அரசன் சாவு என்னும் ஆணையைச் செலுத்தி நடாத்துகிறான். அந்த ஆணையை உயிர்களால் மீற முடியாது. மக்கள், மாடு, மனை முதலிய செல்வங்களில் மனஞ் செலுத்தி மகிழ்ச்சிகொண்டு, செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்யாமல் மனிதர் இருப்பாரானால் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டைப் பெருவெள்ளம் அடித்துக்கொண்டு போவதுபோல, அவரைச் சாவு அடித்துக் கொண்டு போய்விடும்.

இவ்வாறு, பகவன் புத்தர் நிலையாமையையும் சாவையும் சுட்டிக்காட்டி அறநெறியைக் கூறினார். இதனைக் கேட்ட கௌதமை பகவரை வணங்கித் தான் பௌத்த சங்கத்தில் சேர்ந்து துறவு நெறியில் செல்லத் தன்மீது திருவுளம் கொண்டருள வேண்டுமென்று வேண்டினாள். பகவன் அவளைப் பிக்குணிச் சங்கத்திற்கு அனுப்பித் துறவறத்தில் சேர்ப்பித்தார். துறவு பூண்ட கௌதமையார், பேர்போன ஏழு பௌத்தப் பெண்மணிகளில் ஒருவராக விளங்கி, இறுதியில் வீடு பேறடைந்தார்.