உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

"சாப்பிடும்போது விழிப்பாக இருந்து மிதமாக உணவு கொள்கிறவர்கள் நோயில்லாமல் இருப்பார்கள். அன்றியும், விரைவில் மூப்படைய மாட்டார்கள். மேலும், நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பார்கள்.

இந்தச் சொல்லைக் கேட்கும்போது அரசர் அதிகமாக உணவு கொள்வதை நிறுத்திவிடுவார். இவ்வாறு ஓதுதல் நாள் தோறும் நடை பெற்றுக் கொண்டிருந்தது. அதனால், நாள்தோறும் மட்டாக உணவு கொள்ளும் வழக்கம் அரசருக்கு ஏற்பட்டது. இதனால் நாளடைவில் அவருக்குத் தேக நலம் உண்டாயிற்று. முன்பிருந்த சோம்பலும் தூக்கமும் மந்தமும் அவரைவிட்டு அகன்றன; சுறுசுறுப்பும் ஊக்கமும் மன மகிழ்ச்சியும் ஏற்பட்டன. சிடுசிடுப்பும் முன்கோபமும் பறந்தோடின. அரச காரியங்களிலும் மற்றக் காரியங்களிலும் மனம் செலுத்தித் தமது கடமைகளைச் செவ்வனே செய்யத் தொடங்கினார். எல்லோரிடத் திலும் அன்பாகவும் பெருந்தன்மையாகவும் நடந்துகொண்டார். இவ்வித மாறுதல் தமக்கு ஏற்பட்டதை அரசர் தாமே உணர்ந்தார். அவருக்குப் பெரிதும் வியப்பு உண்டாயிற்று. பேருண்டி அருந்திய காலத்தில் தாம் உடம்பிலும் மனத்திலும் அடைந்த துன்பங்களையும், அளவு உணவினால் இப்போது தாம் அடைந்துள்ள இன்பங்களையும் கண்கூடாகக் கண்ட அவர் பேருவகையடைந்தார். இனிய வாழ்க்கை பெற்றதற்காக மனம் மகிழ்ந்து, பெரும்பொருளை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்தார்.

பின்னர், பகவன் புத்தருக்குத் தமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள அவரிடம் சென்றார். சென்று வணங்கி, “பகவரே, தங்கள் அருள்மொழிப்படி நடந்து அளவு உணவு கொண்டபடியினாலே இப்போது சோம்பலும் தூக்கமும் மயக்கமும் முன் சினமும் என்னைவிட்டுப் போய் விட்டன. இப்போது தேக நலம் பெற்றுச் சுறுசுறுப்பாகவும் ஊக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்" என்று கூறி, நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது பகவன் புத்தர், அரசனுக்கு இதனை அருளிச் செய்தார்:

"உடல் நலத்தோடிருப்பது பெரும் பேறாகும். மன நிறைவுடன் இருப்பது பெருஞ்செல்வம் பெற்றதற்குச் சமம் ஆகும். மன உறுதியும் நன்னம்பிக்கையும் கொண்டிருப்பது, நல்ல