உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

திருக்கிறாள்? மாமனார் என்று மாரியாதை இருந்தால் இப்படிப் பேசுவாளா? நீங்களே சொல்லுங்கள். இனி ஒரு நிமிடமும் இவள் இங்கு இருக்கக்கூடாது.” என்று ஆத்திரத்தோடு பேசினார் “ஏன், குழந்தாய்! நீ அப்படிச் சொல்லலாமா? அது தவறுதானே!" என்று கேட்டார்கள் பஞ்சாயத்துப் பெரியோர்.

“நான் அப்படித்தான் சொன்னேன். ஆனால், அதற்கு அதுவா அர்த்தம்?”

“பின்னை, என்னதான் அர்த்தம்.

"மாமா பொங்கலும் பாயசமும் சுடச்சுடத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான்தான் விசிறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பிக்கு பிச்சைக்கு வந்தார். மாமா அவரைக் கவனிக்கவில்லை. அவரும் நெடு நேரம் நின்றார். அப்போது எனக்குள் நான் எண்ணினேன்; ‘முன் பிறப்பில் மாமா நல்ல பெரியவர்களுக்கு உண்டியும் உணவும் கொடுத்ததனால், அதன் பயனை, இப்போது சீமானாகப் பிறந்து உண்ணவும் உடுக்கவும் அனுபவித்து வருகிறார். ஆனால், இந்தப் பிறப்பில் இப்போது புதிதாகத் தான தருமம் செய்து புதிய புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆகவே, பழைய வினையின் பயனை அனுபவிக்கிறபடியால், இவர் பழைய சோறு சாப்பிடுகிறார் என்று சொன்னேன். இப்படிச் சொன்னது எப்படி அவமானப் படுத்துவது ஆகும்?'

இந்த அர்த்தத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வியப்புடன் “அதற்கு இதுவா அர்த்தம்!” என்று கூறி மகிழ்ந்தார்கள். பிரபுவைப் பார்த்து, "குழந்தை சொன்னதில் ஒன்றும் குற்றம் இல்லையே!” என்று கூறினார்கள்.

அவருக்கும் அப்போதுதான் உண்மை விளங்கிற்று "பழைய சோறு சாப்பிடுகிறார்” என்று கூறியது அவமானப் படுத்துவதற்கு அல்ல வென்றும், அதற்குப் பருப்பொருளைவிட நுண்பொருள் இருக்கிற தென்றும் அறிந்தார். “ஆமாம்! விசாகை சொன்னதில் தவறு ஒன்றும் இல்லைதான்!” என்று சொன்னார். அப்போது விசாகையின் தந்தை அவளுக்குக் கூறிய அறிவுரை நினைவிற்கு வந்தது. அந்த அறிவுரை களிலும் ஏதேனும் நுண் பொருள் இருக்க வேண்டும். என்றும் தான் அவற்றைஅலட்சியமாக எண்ணியது தவறு என்றும் நினைத்தார். அவற்றின்