உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

37 பொருள் என்னவென்று அவளைக் கேட்டறிய வேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு அப்போது உண்டாயிற்று. அவர் கூறினார்:

“விசாகையை இங்கு அனுப்பிவைக்கும்

போது தனஞ்சயச் சீமான் சில அறிவுரைகளைக் கூறினார். அதற்கு அர்த்தம் விளங்க வில்லை. ‘வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே, அயலார் நெருப்பை வீட்டில் கொண்டு வராதே' என்று கூறினார். நெருப்பு இல்லாமல் வாழமுடியுமா? அண்டை அயலார் நெருப்புக் கேட்டால் கொடுக்காமல் இல்லை என்று சொல்லலாமா? நம் வீட்டில் நெருப்பு இல்லையானால், அயலாரிடம் வாங்காமல் இருக்க முடியுமா?1 இதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டார்.

விசாகை இதற்கு விளக்கம் கூறினாள்: “வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே என்றால், நெருப்பைக் கொடுக்காதே என்பது அல்ல. கணவன், மாமன், மாமி இவர்களிடத்தில் ஏதேனுங் குற்றங்களைக் கண்டால், நீ போகிற வீடுகளில் அந்தக் குற்றங்களை மற்றவர்களிடம் சொல்லாதே என்பது அர்த்தம். அயலார் நெருப்பை வீட்டுக்குக் கொண்டு வராதே என்றால், புருஷனைப் பற்றியாவது, மாமனார் மாமியாரைப் பற்றியாவது அண்டை அயலில் இருப்பவர்கள் ஏதேனும் அவதூறு சொன்னால், அதைக் கேட்டுக் கொண்டு வந்து, “உங்களைப்பற்றி இன்னின்னார் இப்படி இப்படிச் சொன்னார்கள்' என்று வீட்டில் சொல்லாதே என்று அர்த்தம். இவ்வாறு பேசுவது கலகத்துக்குக் காரணம் ஆகும். ஆகையால் அது நெருப்பு என்று சொல்லப்படும்' இதைக் கேட்டு எல்லோரும் மகிழ்ந்தார்கள்.

“சரிதான்! மற்றவற்றிற்கு என்ன அர்த்தம்? 'கொடுக்கிறவருக்கு மட்டும் கொடு, கொடாதவர்களுக்குக் கொடாதே, கொடுக்கிற வருக்கும் கொடாதவருக்கும் கொடு’ இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” என்று

கேட்டார் மாமனார்.

கொடுக்கிறவர்களுக்கு மட்டும் கொடு என்றால் உன் வீட்டுப் பொருளை யாரேனும் இரவல் கேட்டால் அதைத் திருப்பிக் கொடுக் கிறவர்களுக்கு மட்டும் கொடு என்பது அர்த்தம்.

கொட்டாதவர்களுக்குக் கொடாதே என்றால், உன் வீட்டுப் பொருளை இரவல் வாங்கிக் கொண்டு போய், அதைத் திருப்பிக் கொடுக்காதவர்களுக்குக் கொடாதே என்பது அர்த்தம்.