உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

49

சிராவத்தி நகரத்தில் தன் பெற்றோரிடம் சென்று யாரையேனும் அழைத்து வந்து இறந்த கணவனை அடக்கம் செய்யவேண்டும் என்பது அவளுடைய எண்ணம். அவள் தன் இரண்டு குழந்தை களையும் தூக்கிக்கொண்டு வழிநடந்தாள். ஓட்டமும் நடையுமாக நடந்து நெடுந்தூரம் வந்தாள். காட்டு வழியைக் கடந்துவிட்டாள். வழியில் ஒரு சிற்றாறு குறுக்கிட்டது. சாதாரண காலத்தில் இதில் தண்ணீர் இருப்பது அருமை. எல்லோரும் காலால் நடந்தே இந்த ஆற்றைக் கடப்பது வழக்கம். ஆனால், நேற்று இரவு பெய்த மழையினால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளத்திலும் கஷ்டத்தோடு ஓர் ஆள் இதைக் கடந்துவிடலாம். ஆனால், இரண்டு குழந்தை களைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடக்க அவளால் முடியவில்லை. ஆகவே, அவள் சற்றுச் சிந்தித்தாள். இரண்டு வயதுள்ள பெரிய குழந்தையை இக்கரையில் உட்கார வைத்துவிட்டு, அவள் கைக்குழந்தையுடன் வெள்ளத்தில் இறங்கி மெல்லமெல்ல அக்கரைக்கு சென்றாள். சென்று புல்லின்மேல் அக்குழந்தையைக் கிடத்திவிட்டு, பெரிய குழந்தையை அழைத்துக்கொண்டு வருவதற்காக இக்கரைக்கு வரும் பொருட்டு வெள்ளத்தில் இறங்கினாள். இன்று பிறந்த இக்குழந்தையைத் தனியே கிடத்திவிட்டு வருவது அவளுக்கு மனம் தாழவில்லை. அடிக்கடி குழந்தையைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்ட நடு ஆற்றண்டை வந்தாள். அப்போது, அந்தோ!....

எங்கிருந்தோ ஒரு கழுகு வேகமாய்ப் பறந்து வந்து அக் குழந்தையைக் கால்களால் பற்றிக்கொண்டு பறந்தது. புதிதாகப் பிறந்து செக்கச் செவேலென்றிருந்த அக்குழந்தை கழுகின் கண்ணுக்கு மாமிசம்போல் காணப்பட்டது. நெடுந்தூரத்தி லிருந்தும் பார்க்கக் கூடிய கூர்மையான பார்வையுடைய கழுகு எங்கிருந்தோ இதைக் கண்டு வேகமாகப் பறந்துவந்து ஒரேயடியாய்க் கொண்டுபோய்விட்டது. நட்டாற்றில் இருந்து இதைக் கண்ட தாய்க்கு மனம் துடித்தது. அவள் கைகளை வீசி சூ...சூ... என்று கூவித் துரத்தினாள். கழுகு குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது. அவளுக்குக் குலை நடுங்கிற்று; மனம் பதறிற்று; உயிர் துடித்தது.

66

தன்னுடைய தாய் நாட்டாற்றில் நின்று "சூ...சூ..” என்று கூவிக் கைகளை வீசுவது கண்டு, அக்கரையிலிருந்த குழந்தை, தாய் தன்னைக் கூப்பிடுகிறாள் என்று நினைத்துக்கொண்டு, தாயிடம் செல்ல ஓடிவந்து தண்ணீரில் குதித்தது. பெருவெள்ளம் வேகமாய் ஓடி வருகிறபடியால்,