உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

நாலாம் நாள் விடியற்காலையிலும் கும்பகோசனுடைய குரல் கேட்டது. அரசர் சண்பகத்தினிடம் “இது ஒரு சீமானுடைய குரல்தான்” என்று கூறினார். சண்பகம் மனத்தில் பலவித எண்ணங்கள் உண்டாயின. ‘மகாராஜா இது செல்வந்தன் குரல் என்கிறார்;அவனோ பரம ஏழை. அரசரோ, செல்வந்தன் என்று துணிந்து, உறுதியாகக் கூறுகிறார். இதன் உண்மையைக் கண்டுபிடிக்கவேண்டும். வேறு நாட்டு அரசருடைய ஒற்றர்களில் இவன் ஒருவனோ? இந்த வேடத்துடன் இங்கு இருக்கிறானோ' என்று பலவாறு எண்ணினாள்.

அவள் அரசரிடம் விண்ணப்பம் செய்துகொண்டாள்: “மகாராஜா! அவனைப் பிரபு என்று கூறுகிறீர்கள். அவனோ பரம ஏழையாக இருக்கிறான். மகாராஜாவுக்குத் திருவுளம் இருந்தால், உண்மையை நானே நேரில்சென்று கண்டுபிடித்து வருகிறேன்.” அரசர், “இதன் உண்மையை அறிய நமக்கும் எண்ணம் உண்டு. நீ போய் நீ நீ உண்மையைக் கண்டுபிடித்து வா. செலவுக்கு வேண்டிய பொருளை நிதி மந்திரியிடம் பெற்றுக் கொண்டு போ” என்று கட்டளையிட்டார்.

சண்பகம் செலவுக்கு வேண்டிய பொருளைப் பெற்றுக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்றாள். அவளுக்கு மல்லிகை என்ற பெயருள்ள மணமாகாத மகள் ஒருத்தி இருந்தாள். அவளைச் சண்பகம் அழைத்துச் செய்தியை இரகசியமாகக் கூறினாள். பிறகு இருவரும் ஏழைகளைப் போல அழுக்கு ஆடைகளை அணிந்துகொண்டு வெளியே புறப் பட்டனர். அரண்மனை வேலைக்காரர்கள் குடியிருக்கும் இடத்தை அடைந்து, தாங்கள் நெடுந்தூரத்திலிருந்து ஊர்ப் பிரயாணம் செய்கிற வர்களைப் போல நடித்து, அங்கிருந்த ஒரு வீட்டில் நுழைந்தாரகள். அவ்வீட்டுக்காரியிடம், “அம்மா தூர தேசத்திற்குப் போகிறோம். நாங்கள் களைப்படைந்திருப்பதால் இங்கே இரண்டு நாள்கள் தங்கி இருக்க இடங் கொடுங்கள்” என்று கேட்டனர். “இந்த வீட்டில் நிறைய ஆட்கள் உள்ளனர். இங்குத் தங்க இடங் கிடையாது. அதா கும்ப கோசன் வீடு காலியாயிருக்கிறது; அங்குப் போய்க் கேளுங்கள்” என்று கூறி அவ்வீட்டுக்காரி, கும்பகோசன் வீட்டைக் காட்டினாள்.

கும்பகோசன் வீட்டிற்கு இருவரும் சென்றார்கள். கும்பகோசன் தனியே இருந்தான. சண்பகம் அவனைப் பார்த்து “ஐயா! நாங்கள் தூர தேசத்திலிருந்து பிரயாணம் செய்து வருகிறோம். இங்கே, இரண்டு நாட்கள் தங்கிப்போக இடம்தரவேண்டும். நாங்கள் மிகவும் களைத் திருக்கிறோம்" என்றாள்.