உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

63

அடைந்தான். அப்போது செல்வந்தனுடைய மாளிகை இருந்த இடம் தெரியாமல் இடிந்துவிழுந்து மண்மேடிட்டு, மரஞ்செடிகள் முளைத் திருந்தது. அந்தப் பிரபுவின் மாளிகை இருந்த இடத்தை இந்நகர வாசிகளில் பழமையானவர்களைக் கேட்டு அறிந்தான். ஒரு நாள் இரவு அவ்விடம் சென்று பிரபு சொன்ன அடையாளமுள்ள இடத்தைக் கண்டுபிடித்துத் தோண்டிப் பார்த்தான். அங்கே அவர் கூறியபடி பொற்காசுள்ள ஐாடிகள் இருந்தன. பொற்காசுகள் வைத்த படியே குறையாது இருந்தன.

66

·

அந்த வாலிபன் பொற்சாடிகளை முன்போலவே மூடி வைத்துவிட்டு நகரத்திற்கு வந்தான். அவன் தனக்குள் எண்ணினான். 'இந்த புதையலைத் தோண்டி எடுத்து வைத்துக் கொண்டால், இந்த ஏழைக்குச் செல்வப் புதையல் கிடைத்தது எவ்வாறு? என்று மக்கள் என்னைத் தொல்லைப்படுத்துவார்கள். நான் இன்னார் மகன், எனது பரம்பரைச் சொத்து இது என்று கூறினால் அதை ஒருவரும் நம்ப மாட்டார்கள். தகுந்த காலம் ஏற்படும் வரையில் கூலி வேலையாவது செய்து பிழைப்போம்' என எண்ணினான். ஆகவே, அரண்மனைச் சேவகரிடம் வந்து தனக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று கேட்டான். அவர்கள், ‘அதிகாலையில் எங்களை எழுப்பிவிடு, உனக்குச் சம்பளமும் இருக்க இடமும் தருகிறோம்' என்று கூறி, அவனை வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். அரசர், சேவகர்களுக்கு விடுமுறையளித்தபோது அன்றைய செலவுக்காக அவன் அந்தப் புதையலிலிருந்து இரண்டு பொற்காசுகளை எடுத்துவந்தான். அந்த ஆள்தான் அடியேன். அடியேன் பெயர் கும்பகோசன். அடியேன் கொண்டு வந்த பொற்காசுகளை அதோ நிற்கும் சண்பகத்தினிடம் கொடுத்தேன். அப்போது அவள் என் வீட்டில் தங்கியிருந்தாள். அந்தக் காசுகள்தாம் இதோ இந்தத் தட்டில் இருப்பவை" என்று கூறிக் கும்பகோசன் தன் கதையை முடித்தான்.

சபையிலிருந்தோர் வியப்படைந்தனர். கும்பகோசன் சொல்லிய படி, ஒரு கோடி பொன் நிறைந்த ஜாடி, அவன் காட்டிய இடத்தில் அகப் பட்டது. அரசர் கும்பகோசனை அரண்மனைப் பொருள் காப்பாளராக அமர்த்தி அவனுக்குத் தகுந்த பதவியை அளித்தார். அரசரிடம் உத்தியோகத்தில் அமர்ந்த பிறகும் கும்பகோசன் முன் போலவே அடக்கமாகவும் பெருமிதமில்லாமலும் நடந்துகொண்டான்.