உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

கூறுங்கள்.” தன் சூல்கொண்ட வயிற்றைச் சுட்டிக்காட்டி மேலும் பேசினாள்: “என்னை இந்த நிலையில் விட்டுவிட்டுத் தாங்கள் அறவுரை போதித்துக் கொண்டிருந்தால், என் கதி என்னாவது? எனக்கு என்ன வகை செய்தீர்கள்? இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கப்போகிறது. பிரசவத்திற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்” என்று கூறினாள். இவள் தன்னை எல்லாரும் காணும்படி அங்கு நின்றாள். இவள் பேசியதைக் கேட்ட பகவன் புத்தர் ஒன்றும் மறுமொழி கூறாமல் மௌனமாக இருந்தார்.

னால்,

கூட்டத்தில் ஒரே அமைதி காணப்பட்டது. எல்லோருடைய உள்ளத்திலும் பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. வியப்பும் திகைப்பும் பலவித எண்ணங்களும் எல்லோருடைய மனத்தையும் அலைக்கழித்தன. எல்லோரும் அவளைப் பார்த்தார்கள். சூல்கொண்ட பிள்ளைத்தாய்ச்சியாக அவள் காணப்பட்டாள். பெரிய சபையிலே, பலர் முன்னிலையிலே, பகவன் புத்தர்மீது குற்றம் சாட்டுகிறாள். அவள் கூறுவது உண்மையாயிருக்கமோ? பகவருக்கும் அவளுக்கும் தொடர்பு கூடா ஒழுக்கம் உண்டோ? இந்தத் தொடர்பின் பயனாக இவள் வயிறுவாய்த்துச் சூல்கொண்டாளோ? இது உண்மையாயிருக்குமோ? இதற்குப் பகவர் என்ன விடை

கூறப்போகிறார்!

பகவன் புத்தர் மௌனமாக இருந்தார். அவர் மௌனமாக இருந்தது. இவள் சாற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்டது போல அங்குள்ளவருக்குத் தோன்றியது.

அப்போது மேலும் அவள் பேசினாள்: “ஏன் மௌனமாக இருக்கிறீர்? என்னை ஒரு குழந்தைக்குத் தாயாக்கிவிட்டு, இந்த நிலையில் என்னை அனாதையாக விடுவது அழகா? என் பிள்ளைப் பேறுக்காகவும் மருத்துவத்திற்காகவும் வழிவகை செய்து கொடுங்கள்.

وو

இதைக் கேட்டுப் பகவன் புத்தர், மேலும் மௌனமாகவும் அமைதியாகவும் இருந்தார். பகவர் மௌனமாக இருந்தது. சிஞ்சாமாணவிகை கூறியது உண்மை என்று ஒப்புக்கொள்வது போல அங்கிருந்தவர்களுக்குத் தோன்றியது. அவள்மீது இரக்கமும் பகவன் புத்தர் மீது வெறுப்பும் அக்கூட்டத்திலிருந்தவர்களில் பலருக்கும் ஏற்பட்டன. பகவன் புத்தர்மேல் இருந்த நல்லெண்ணமும் உயர்ந்த மதிப்பும் அங்கிருந்தவர்களில் பலருக்கு இல்லாமல் போயின.