உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் /71

“ஏன் கொலை செய்தார்கள்?” என்று கேட்டார் அரசர்.

“சுந்தரி அழகுள்ள ஸ்திரீ. அவளுக்கும் கௌதம புத்தருக்கும் சில காலமாகக் கூடாவொழுக்கம் ஏற்பட்டிருந்ததாக ஊரில் பேசிக் கொண்டார்கள். அந்தக் குற்றத்தை மறைப்பதற்காக அவருடைய சீடர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்” என்று கூறினர் சமயவாதிகள்.

“இன்னார் கொலை செய்தார் என்பதற்குச் சான்று ஏதேனும்

உண்டோ?”

“இல்லை. இன்று காலையில் சுந்தரியின் பிணம் பௌத்த பிக்ஷுக்களுடைய குப்பைமேட்டில் கிடக்கிறது என்று கேள்விப் பட்டோம். போய்ப் பார்த்தோம். அங்கே பிணம் கிடக்கிறது” என்றார்கள்.

"நல்லது! குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பது எங்கள் வேலை. நீங்கள் போய், உங்கள் மதத்துச் சுந்தரியின் பிணத்தை அடக்கம் செய்யுங்கள்” என்று கூறினார் அரசர்.

சமயவாதிகள் திரும்பிவந்து, சுந்தரியின் பிணத்தை அடக்கம் செய்வதற்காகச் சுடுகாட்டிற்கு ஊர்வலமாகக் கொண்டு போனார்கள். போகும்போது, "பௌத்த பிக்ஷுக்கள் சுந்தரியைக் கொன்று போட்டார்கள்” என்று தெருவில் கூச்சலிட்டுக் கொண்டு சென்றார்கள். பௌத்தர்களைப் பற்றியும் கௌதம புத்தரைப் பற்றியும் முன்னமே ஏற்பட்டிருந்த அபவாதத்தோடு இவர்கள் செய்த பிரசாரம், மக்களிடத்தில் வெறுப்பை யுண்டாக்கிற்று. பௌத்த பிக்ஷக்களைப் பற்றிப் பலவாறு அவதூறு பேசத் தொடங்கினார்கள். போலித் துறவிகள், பகல் சந்நியாசிகள் என்றும் கொலைகாரக் கூட்டம் என்றும் மக்களை ஏமாற்றுகிறவர்கள் என்றும் நகரமெங்கும் பௌத்த பிக்ஷுக் களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். பிக்ஷுக்களைக் காண்கின்ற இடத்தில் அவர்களை நிந்தித்துப் பேசியும் இழிவுபடுத்தியும் அவமரியாதை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் மீது வசைமாரி பொழியப்பட்டது. பௌத்தர்களுக்கு முன்பிருந்த பெருமதிப்பும் கௌரவமும் மரியாதையும் பறிபோயின. நிந்தனையும் ஏசலும் கேலிப்பேச்சும் பிக்ஷுக்களின்மேல் வீசி எறியப்பட்டன.

பிக்ஷுக்களின் நிலைமை மோசமாய்விட்டது. அவர்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. அவர்கள் பகவன் புத்தரிடம்