உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இவ்வளவு பெரிய பாறை மலையுச்சியிலிருந்து எவ்வாறு உருண்டு வந்தது? இதை உருட்டித் தள்ளியவர் யார்? மழை காலமாக இருந்தால் வெள்ளத்தினால் மண் இளகி பாறை உருண்டது என்று கருதலாம்; அல்லது இடி விழுந்து பாறை புரண்டது என்று நினைக்கலாம்.

இதுவோ மழையற்ற வெயில் காய்கிற வேனிற்காலம்; பாறை தானாகவே உருண்டுவந்தது என்பது நம்பக் கூடியதன்று.

சீடர்கள் மலையுச்சியை நோக்கினார்கள். மலையுச்சியிலே தேவ தத்தன் நின்றுகொண்டு மலையடிவாரத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறான். பகவன் புத்தரைக் கொல்லச் சதிசெய்து, மலையுச்சியிலிருந்து பாறையைப் புரட்டித் தள்ளியவன் அவன் தான். தான் கருதிய காரியத்தைப் பாறை செய்து முடித்ததா என்பதை அறிய, பாறையை உருட்டித்தள்ளிய அவன், மேலிருந்த படியே கீழே பார்க்கிறான். முன்பு இரண்டு முறை, ஆட்களை ஏவிப் புத்தரைக் கொல்ல முயற்சிசெய்து அந்த முயற்சிகளில் தோல்வியுற்றான். இப்போது தானே தன் கைகளால் பாறையை உருட்டித்தள்ளி அவரைக் கொல்ல முயன்றான். ஆனால், இப்போதும் அவன் வெற்றி பெறவில்லை. பாறை இடைவழியிலே தங்கிவிட்டது.

தேவதத்தன், புத்தருடைய நெருங்கிய உறவினன். புத்தரிடம் வந்து துறவு பூண்டவன். பௌத்த மதம் நாட்டிலே செல்வாக் கடைந்து பெருமையும் சிறப்பும் பெற்றிருப்பதைக் கண்டு. பகவன் புத்தருக்குப் பதிலாகத்தானே தலைவனாக இருந்து பெருமை யடைய வேண்டும் என்று எண்ணினான். தன் கருத்தைப் புத்தரிடம் கூறித் தன்னைத் தலைவனாக்கும்படி வேண்டினான். பகவர், “புத்த பதவி ஒருவர் இன் னொருவருக்குக் கொடுத்துப் பெறக்கூடிய நிலையன்று. அவர வருடைய விடா முயற்சியினாலே, உழைப்பினாலே பெறவேண்டிய நிலை” என்று கூறிவிட்டார். ஆகவே, தேவதத்தன் புத்தரைக் கொன்று அந்த இடத்தில் தான் அமர்ந்து பெருமையடைய உறுதிகொண்டான். அதன் காரணமாகத்தான்அவரைக் கொல்ல முயன்றான். மூன்று முறை முயன்று பார்த்து மும்முறையும் தோல்வியுற்றான்.

காலில் காயம் அடைந்த பகவன் புத்தரைச் சீடர்கள் தூக்கிக் தாங்கிக்கொண்டு அருகிலே இருந்த மத்தருச்சி என்னும் இடத்திற்குக் கொண்டுபோனார்கள். பகவர், அருகிலிருக்கும் மருத்துவன் சீவகனுடைய மாந்தோப்புக்குத் தம்மை அழைத்துச் செல்லும்படி