உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

மணஞ் செய்து கொள்ள விரும்பவில்லை. கொலைக் களத்துக்குச் சென்ற கள்ளனைத்தான் மணம் செய்து கொள்வேன் என்று உறுதியாகக் கூறினாள்.

66

‘அவரையல்லாமல் வேறு ஒருவரையும் பார்க்கவும் மாட்டேன். இது உறுதி. அவர் உயிர் போய்விட்டால் என் உயிரும் போய்விடும். அவரைக் காப்பாற்றுங்கள். இல்லை யானால் நானும் இறந்துவிடுவேன்” என்று திட்டமாகக் கூறி விட்டாள்.

பத்திரைக்குத் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ராஜகிருக நகரத்தின் சீமான் மகளுக்கு ஒரே மகளுக்குத் திருமணம் நடக்கிறதென்றால், அதன் சிறப்பையும் வைபவத்தையும் சொல்ல வேண்டுமோ? அறுசுவை விருந்துகள், மேளதாள வாத்தியங்கள், இசைப்பாட்டுக் கச்சேரிகள், நாட்டிய அரங்கங்கள், தான தருமங்கள் முதலிய எல்லாம் குறைவில்லாமல் நடைபெற்றன. திருமணத்தின் சிறப்புக்களைப்பற்றி நகரமக்கள் வியந்து புகழ்ந்து பேசினார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பத்திரை தன் மணவாளனுடன் மகிழ்ச்சி யோடிருந்தாள். பத்திரை இயற்கையில் அழகுள்ளவள். அதோடு அவளுடைய ஆடையணிகள் முதலிய செயற்கை யழகுகள் கலந்து அவள் தெய்வ மகள்போலக் காணப்பட்டாள். பொன் காய்ந்த மரம் என்பார்களே, அதுபோல இல்லாமல் முத்துமணி முதலிய நவரத்தினங் கள் காய்ந்த மரம் போல் இருந்தாள். செல்வச் சீமானின் ஒரே மகள் அல்லவா? இவளை மணந்த மணவாளனும் பாக்கிய வானாகத்தானே இருக்க வேண்டும்? அவன் யார்?

பத்திரையை மணந்த மணவாளன், அன்று அவள் கண்ட கள்ளன்தான்! சேவகர் காவலில் கொலைக்களத்திற்குச் சென்ற அதே கள்ளன் சத்ருகன்தான்!

தன்னுடைய ஒரே மகளான பத்திரையின் பிடிவாதத்தையும், அவள் மனோநிலையையும் அறிந்த அவள் தந்தை, வேறு வழியில்லாமல் பெருந் தொகையான பொருளைக் கொலைச் சேவகனுக்குக் கைக் கூலியாகக் கொடுத்துக் கள்ளனை மீட்டுக் கொண்டு வந்தார். அவனை நீராட்டி ஆடையணிகள் அணிவித்து மணமகன் கோலம் புனையச் செய்தார். வெகு சிறப்பாகத் திருமணத்தை முடித்துவைத்தார். ஆனால், மணமகன், பேர் போன சத்ருகன் என்னும் கள்வன் என்பது மற்றவர்