உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

93

யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவனை நல்ல குடும்பத்துப் பிள்ளை என்றே எண்ணிக்கொண்டார்கள். பத்திரை தான் விரும்பிய கள்ளனையே கணவனாகப் பெற்றாள்.

செல்வச் சீமானுடைய ஒரே மகளை மனைவியாகப் பெற்ற சத்ருகன் மனம் மகிழ்ந்தானா? தன் நல்வினைப் பயன் தன்னைப் பெருஞ் செல்வனாக்கியதை நினைத்து வியப்படைந்தானா? செல்வத்தினால் அடையக் கூடிய இன்ப சுகங்களைத் துய்க்க வாய்ப்புக் கிடைத்ததற் காக உளம் களித்தானா? இல்லை, இல்லை. தான் அடைந்த கிடைத்தற் கரிய உயர்ந்த நிலையை, வேதனை தருகின்ற துன்ப வாழ்க்கையாக அவன் கருதினான். தான் ஒரு சங்கடமும் அபாயகரமுமான ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டதாக நினைத்தான். அல்லலைத் தருகிற வேதனையுள்ள சூழலில் அகப்பட்டுக்கொண்டதாகக் கருதி அச்சங் கொண்டான். இவ்வாறு அவன் எண்ணியது, உலகத்தை வெறுத்துத் தவம் செய்யத் துணியும் துறவியின் தூய உள்ளம் அவனுக்கு ஏற்பட்டதாகக் கருத வேண்டா. பின்னை எதனால் என்றால், கள்ளனுடைய இழிந்த மனப்பான்மையினால், கொலை செய்வதும் கொள்ளையிடுவதும் கசடர்களோடு சேர்ந்து கள்ளுண்டு களிப்பதும் மனம்போனபடி திரிவதும் நல்லவரோடு உறவாடாமல் தூர்த்தரோடு சேர்ந்து நாடோடியாகத் திரிவதும், அவன் இளமையில் பழகிக்கொண்ட வாழ்க்கை முறை. நாகரிகமான வாழ்க்கையை அமைதியாக நடத்திச் செல்ல அவன் பழகியறியான். ஆகவே, மதிப்புள்ள நல்ல வாழ்க்கையை அவன் மனம் விரும்பவில்லை. நாகரிகமான அமைதியுள்ள நல் வாழ்க்கை அவனுக்கு அல்லலைத் தருகிற துன்ப வாழ்க்கையாகத் தோன்றியது. தன் எதிரிலே, பொன்னும் மணியும் காய்த்த பொற் பதுமை போல நிற்கும் இளமங்கையின்அழகிலும் அன்பிலும் அவன் மனம் செல்லவில்லை. தன் மனைவியின் நகைகள் தனக்குரியன என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளைக் கொன்று அவள் அணிந் திருக்கும் நகைகளைக் களவாடிக் கொண்டு போய் அவற்றை விற்றுக் கள்ளுக்கடையில் கள்ளர்களோடு களியாட்ட மாட அவன் கருதினான். ஆகவே, அவளைக் கொல்லவும் அவள் நகைகளைக் களவாடவும் எண்ணினான்.

'மன வாட்டமாக இருக்கிறீர்களே! என்ன காரணம்?” என்று கேட்டாள் பத்திரை.