உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

"ஒன்றுமில்லை. ஒரு பிரார்த்தனை செய்துகொண்டேன்; அதைச் செய்து முடிக்க யோசிக்கிறேன்.

66

“என்ன பிரார்த்தனை? எதற்குப் பிரார்த்தனை?”

இந்த ஊருக்கு அப்பால், காட்டிலே ஒரு மலை இருக்கிறது. அந்த மலையுச்சியில் ஒரு தெய்வம் உண்டு. என்னைக் கொல்லு வதற்காகச் சேவகர், அன்று கொலைக் களத்திற்குக் கொண்டு போன போது, அந்தத் தெய்வத்திற்கு, என் உயிர் தப்பினால் பொங்கலும் பூவும் பழமும் படைக்கிறேன். என்று பிரார்த்தனை செய்துகொண்டேன். அதை இன்றைக்குச் செய்ய வேண்டும்.

"

“அதற்கென்ன? அப்படியே செய்தால் போகிறது. அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்கிறேன்” என்று கூறி, பத்திரை வேலை யாட்களை அழைத்துப் பூசைக்கு வேண்டியவற்றை ஆயத்தம் செய்யும்படி கட்டளையிட்டாள். பணிவிடையாளர் எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துவைத்தார்கள். வண்டியும் ஆயத்தமாக மாளிகை வாயிலில் நின்றது. பத்திரையின் தோழியரும் அவளோடு புறப் பட்டார்கள். அவன் "இவர்கள் யாரும் வரவேண்டாம், நாம் மட்டும் போவோம்" என்றான். பத்திரை, தோழியரை நிறுத்திவிட்டுத் தனியே கணவனுடன் வண்டியேறினாள். வண்டி விரைந்து சென்று மலையடி வாரத்தையடைந்தது. வண்டிக்காரனை மலையடிவாரத்திலேயே இருக்கச் சொல்லிவிட்டு, அவன் பத்திரையை அழைத்துக் கொண்டு மலைமேல் ஏறினான். மலைமேல் ஏறும்போது அவன் ஒன்றும் பேசாமலே மௌனமாக நடந்தான். வண்டியில் வந்த போதும் அவன் அவளிடம் பேசவில்லை. இவனுடைய மௌனமும் முகக்குறியும் ஆழ்ந்த சிந்தனையும் பத்திரையின் மனத்தில் கலவரத்தையுண்டாக்கின. அவள், அவன் முகத்தை நோக்கினாள். முகம் கடுமையாகக் காணப்பட்டது. அவள் மனத்தில் அச்சம் ஏற்பட்டது.

மௌனமாகவே இருவரும் மலைமேல் ஏறினார்கள். மலை யுச்சியை அடைந்தார்கள். அவன் அவளை ஒரு புறமாக அழைத்துச் சென்றான். அங்கு ஒரு பெரிய அகலமான பாறை இருந்தது. அதன் அருகில் சென்றதும் அவள் திடுக்கிட்டு நின்றாள். அந்தப் பாறைக்குப் பக்கத்தில் படுபாதாளம் தெரிந்தது. தவறி அதில் விழுகிறவர்கள் கதி அதோகதிதான். ஒரு சிறு எலும்பும் மிஞ்சாது. ஆ! எவ்வளவு பயங்கரமான இடம்! மலையுச்சி ஆகையால் காற்று விசையாக வீசிக்கொண்டிருந்தது. அவள் உடுத்தியிருந்த பட்டாடை காற்றின்