உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் / 95 வேகத்தினால் படபட என்று அசைந்தது.

66

'இதுவா தெய்வத்திற்குப் பூசை செய்யவேண்டிய இடம்” என்று

கேட்டாள்.

"தெய்வமாவது பூதமாவது! உன் நகைகளைக் கழற்றி வை என்றான் கள்ளன்.

இதைக் கேட்டதும் திடுக்கிட்டுப்போனாள். அச்சமும் ஐயமும் அதிகப்பட்டன. ஏதோ ஆபத்து நெருங்கிவிட்டது என்று அவள் மனம் அறிந்துகொண்டது.

“ஏன்? நகைகள் எதற்கு?" என்று கேட்டாள்.

"உன்னைக் கொன்றுவிடப் போகிறேன். சீக்கிரம் கழற்றி வை’ என்ற இந்தக் குரலில் கண்டிப்பும் உறுதியும் கலந்திருந்தன. இதைக் கேட்டவுடனே அவள் நடுநடுங்கினாள்.

"நான் உங்கள் மனைவிதானே. இந்த நகைகள் எல்லாம் உங்களுக்குத்தானே சொந்தம்? இது மட்டுமா? என் தகப்பனார் சொத்து முழுவதும் உங்களுக்குத்தானே சேரப்போகிறது? என்னை ஏன் கொல்ல வேண்டும்?" என்று வினயமாகக் கூறினாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது! கழற்றிவை. ஆகட்டும்!” என்று உரத்த குரலில் மிரட்டினான்.

அறிவுரை பேசுவதில் பயனில்லை. காரியம் மிஞ்சிவிட்டது. கொலை செய்வதற்கென்றே முன்யோசனையுடன் இங்கு அழைத்து வந்திருக்கிறான். கத்தி, வாள் ஏதும் ஆயுதங்கள் அவன் கையில் இல்லை. படுபாதாளத்தில் தன்னைத் தள்ளிக் கொல்லப் போகிறான் என்பது உறுதி. இந்த ஆபத்தில் இருந்து எப்படித் தப்பவது? மின்னல் வேகத்தில் அவள் அறிவு வேலைசெய்தது. 'தற்கொல்லியை முற் கொல்ல வேண்டும்' என்னும் பழமொழி அவள் நினைவுக்கு வந்தது.

உடனே நகைகளைக் கழற்றத் தொடங்கினாள். ஒவ்வொரு நகையாகக் கழற்றிக்கொண்டே, “அன்று தங்களைக் கண்டு தங்கள்மீது ஆசைகொண்டேன். இப்போதும் தங்களை என்னுயிர்போல் நேசிக்கிறேன். தாங்கள்தான் எனக்குத் தெய்வம். ஆகையால், முதலில் தங்களைச் சுற்றி வலம் வந்து கும்பிடுவேன். பிறகு, உங்கள் இஷ்டப்படி என்னைக் கொலை செய்துவிடுங்கள்” என்று பணிவுடன் கூறினாள்.