உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

பொறுக்க முடியாத வயிற்றுவலியும் வேதனையும் உண்டாயின. அவர் அவற்றை வெளிக்குக் காட்டாமல் அடக்கிக் கொண்டார். பிறகு, நன்றிகூறு முகத்தான் பகவர், சுந்தனுக்கு அறவுரைகளைக் கூறிய பிறகு அவ்விடத்தை விட்டுப் புறப் பட்டார்.

அவருக்கு வயிற்றிலே பொறுக்கமுடியாத வேதனையும் குடல்வலியும் அதிகப்பட்டது; மரணவேதனை போன்ற வலி ஏற்பட்டது. “ஆனந்த! குசிநகரம் போவோம்” என்று கூறி வழிநடந்தார். வேதனையையும் வலியையும் பொறுத்துக்கொண்டு வழி நடந்தார். இளைப்பும் களைப்பும் மேலிட்டது “ஆனந்த! படுக்கையை விரி” என்றார். ஆனந்தர் சீவர ஆடையை நான்காக மடித்து வழியிலிருந்த ஒரு மரத்தின் நிழலிலே விரித்தார். சற்று நேரம் அங்குப் படுத்தார் பகவர். பிறகு நீர்விடாய் உண்டாயிற்று. ஆனந்தர் நீர்கொண்டு வந்து கொடுக்க அதனை அருந்தினார். மறுபடியும் எழுந்து வழி நடந்தார். இடைவழியிலே சுகுந்தர என்னும் ஆறு இருந்தது. அதில் இறங்கி நீராடினார். பிறகு அருகிலே இருந்த ஒர மாஞ்சோலைக்குச் சென்றார். வயிற்று வலியும் வேதனையும் அதிகமாகவே இருந்தது. மாமர நிழலிலே ஆனந்ததேரர் சீவர ஆடையை விரித்தார். அதன்மேல் பகவன் புத்தர் படுத்தார் தாம் பரிநிர்வாணம் அடையும் காலம் அணுகி விட்டது என்பதை அறிந்தார். அப்போது ஆனந்தரிடம் இவ்வாறு கூறினார்:

66

ஆனந்த! சுந்தன் அளித்த உணவினாலே புத்தர் நோய் வாய்ப்பட்டு இறந்தார் என்று சிலர் கூறுவார்கள். அது தவறு. ‘சுந்த! நீ கொடுத்த உணவுதான் புத்தர் அருந்திய கடைசி உணவு. அவ்வுணவை உட்கொண்ட பிறகு பகவான் பரிநிர்வாணம் அடைந்தார் ஆகையி னாலே, நீ புண்ணியவான். புத்தருடைய வாயினாலே இவ்வாறு கூறியதை நான் காதால் கேட்டேன்' என்று நீ சுந்தனிடம் கூறு.

66

'ஆனந்த! இரண்டு உணவுகள் ததாகதருக்குத் துணைபுரிந்தன. அவற்றில் முதலாவது, ததாகதர் போதி ஞானத்தை அடைவதற்கு முன்பு சுஜாதையளித்த பால் பாயசம். இரண்டாவது, ததாகதர் பரிநிர்வாணம் பெறுவதற்கு முன்பு சுந்தன் அளித்த இந்த விருந்து. இந்த இரண்டு விருந்துகளையும் ததாகதர் ஒன்றுபோல மதித்தார் என்று சுந்தனுக்குக் கூறு” என்று அருளினார்.