உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இசைவாணர்களைப் பற்றியும், நடனக் கலைஞர்களைப் பற்றியும் உலகத்திலே பல கதைகள் வழங்கி வருகின்றன. நம்முடைய பாரத தேசத்திலேயும் கலைவாணர்களைப் பற்றின கதைகள் தொன்று தொட்டு வழங்கி வருகின்றன. இந்தக் கதைகளில் சில ‘புராணக் கதைகள்’ அதாவது, மண்ணுலகத்திலும் விண்ணுல கத்திலும் நடந்ததாகக் கூறப் படுகிற கற்பனைக் கதைகள். சில கதைகள் மண்ணுலகத்திலே உண்மையாக நடந்த வரலாற்றுக் கதைகள். இந்தக் கதைகளில் சில பௌத்த சமயக் கதைகள், சில சமண சமயக் கதைகள், சில சைவ சமயக் கதைகள், சில 'இந்து' சமயக் கதைகள். இந்தக கதைகளின் தொகுப்பு இந்த நூல்.

இந்தக் கதைகளை ஏன் எழுதினேன்? நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன். வரலாற்று ஆராய்ச்சி நூல் களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன் நான். ஆராய்ச்சி நூல்களைப் பெரும்பான்மை யோர் படிப்பதில்லை. மிகச் சிறுபான்மையோரேபடிக்கின்றனர். இதை நான் நன்றாக அறிவேன். மிகச் சுருங்கிய தொகையினர் தான் படிக்கிறார்கள் என்பதை நன்றாகத் தெரிந்தே ஆராய்ச்சி நூல்களை எழுதுகிறேன்.

ஆராய்ச்சிக்குப் பல நூல்களை, பலதுறை நூல்களைப் படிக்க வேண்டும். அதாவது சிறு நூல் எழுதுவதாக இருந்தாலும், பல நூல்களைப் படித்து ஆதாரத்தோடு ஆராய்ச்சி நூல்களை எழுத வேண்டும். கதை எழுதுவதற்குப் பல நூல்களைப் படிக்கத் தேவை யில்லை. சிறு கருத்தை வைத்துக் கொண்டு அதைக் கற்பனைகளாலும் சொல் அலங்காரங்களாலும் புனைந்து கதையையோ நவீனங் களையோ எழுதிவிடலாம். ஆராய்ச்சி அவ்வளவு எளிது அன்று. கடலில் முழுகி முத்து எடுப்பது போன்ற கடினமான செயல் ஆராய்ச்சி. பலர் படிக்காத மிகமிகச் சிலர் மட்டுமே படிக்கிற ஆராய்ச்சி நூல்களை எழுதுகிற நான் இந்தக் கதைகளை ஏன் தொகுத்து எழுதினேன்? கதைகளைத் தொகுப்பதும், தொகுத்தவற்றை எழுதுவதும் ஆராய்ச்சி நூல் எழுதுவது போன்ற கடினமான செயல் அன்றே.

ஏன் இதை எழுதினேன்? ஆராய்ச்சியாளர் பலதுறை நூல்களைப் படிக்கவேண்டும்; பல சமய நூல்களையும் படிக்க வேண்டும்; பல இலக்கிய நூல்களையும் படிக்கவேண்டும். இந்த முறையில் பலதுறை நூல்களையும் பல சமய நூல்களையும் படித்தபோது இடையிடையே ஆராய்ச்சிக்கு வேண்டாத பல செய்திகள் கிடைத்தன. அவற்றில் கலை