உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

-

177

விதூஷகன் நடன ஆசிரியர்களைத் தனித்தனியே கண்டு அவர்களுடைய கலைத் திறமையை மெச்சிப் பேசினான். இவ்வளவு பெரியவராகிய உங்களை அந்த அரதத்தன் இழிவாகப் பேசினான் என்று கணதாசனிடம் கூறினான். அரதத்தனிடஞ் சென்று அவனை வானளாவப் புகழ்ந்து பேசி உங்கள் கலையைக் கணதாசன் குறைவாகப் பேசுகிறான் என்று அரதத்தனிடங் கூறினான். இவ்வாறு இரண்டு நாடகாசிரியர்களுக்குள் பகை யுண்டாக்கிப் பூசலை வளரச் செய்தான். இது விதூஷகனின் சூழ்ச்சி என்பதையறியாமல் அக் கலைஞர்கள் ஒருவருக்கொருவர் பகைகொண்டார்கள். கடைசியில் அரசனிடத்தில் வந்து முறையிட்டுக் கொண்டார்கள்.

66

“அரசர் பெருமானே! இந்த அரதத்தன் என்னை, ‘இவன் என் கால் தூசுக்குக்கூட இணையாக மாட்டான்' என்று என்னை இகழ்ந்துப் பேசினான்” என்று கணதாசன் அரசனிடம் முறை யிட்டான். “அரசர் பெருமானே! இந்தக் கணதாசன் தான் என்னை முதலில் இகழ்ந்துப் பேசினான். ‘இந்தக் கடலுக்கு இணையாகுமா இந்தக் குட்டை' என்று இவன் என்னைத் தாழ்த்திப் பேசினான்” என்று முறையிட்டான் அரதத்தன்.

இந்த நாடகாசிரியர்களின் வழக்கைக் கேட்ட அரசன், இது கௌதமன் செய்து வைத்த கலகம் என்று அறிந்துகொண்டு இந்த வழக்கைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எண்ணினான். பிறகு அரசன் கூறினான்: "நீங்கள் இருவரும் சிறந்த கலைஞர்கள். உங்களுக்குச் சமமான கலைஞர்கள் உலகத்திலே ஒருவரும் இலர், உங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டால் என்ன செய்வது? உங்களில் யார் சிறந்தவர் என்று தீர்ப்புக் கூறுவதற்கு ஒரே வழியுண்டு. உங் களுடைய சீடர்களை அழைத்து வந்து அரண்மனை அரங்கத்தில் நாட்டியமாடச் செய்யுங்கள். யாருடைய சீடர் திறமையாக நடிக்கிறாரோ அவருடைய ஆசிரியர் கூத்துக் கலையில் சிறந்தவர் என்பதைத் தீர்மானிக்கலாம்.

அரசன் கூறிய இந்த யோசனைக்குக் கலைஞர்கள் இணங் கினார்கள். அடுத்த நாள் மாணவியரை அழைத்து வந்து நாட்டிய மாடச் செய்வதென்று முடிவு செய்யப்பட்டது. அடுத்த நாள் இரண்டு நாடகாசிரியர்களும் தங்கள் தங்கள் மாணவியரை அழைத்துக் கொண்டு வந்தார்கள். அரசனும் விதூஷகனும் அரங்கத்துக்கு வந்து