உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

கற்பித்திருக்கிறேன். அவர்கள் எல்லோரையும்விட மாளவி மிக நன்றாகக் கற்று வருகிறாள் என்று அவன் பெருமைப் பட்டுக் கொண்டான்.

ஓவியக் கலைஞன் ஒருவன் வந்து இராணியின் உருவத்தை வண்ணச் சித்திரமாக எழுதினான். அப்போது அவளுடன் ஊழியப் பெண்ணாகிய மாளவியின் எழிலும் சாயலும் அழகாக இருந்தபடியால் அவள் உருவத்தையும் அந்தச் சித்திரத்தில் எழுதினான். ஓவியம் எழுதி முடிந்த பிறகு அந்தப் படத்தை அரண்மனையின் ஓவியச் சாலையில் அமைத்து வைத்தான். அந்தப் படத்தைப் பார்ப்பதற்காக இராணி தன்னுடைய தோழி வசுலட்சுமியுடன் சித்திரச் சாலைக்கு வந்தாள். இராணி ஓவியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அரசன் தற் செயலாக அவ்விடத்துக்கு வந்தான். வந்து அவனும் அந்த ஓவியத்தைப் பார்த்தான். பார்த்து “ஓவியத்தில் உன்னுடன் இருக்கிற

வள் யார்? இவளுடைய பெயர் என்ன?" என்று அரசியைக் கேட்டாள். அரசனுடைய கண்ணில் படாதபடி தான் மறைத்து வைத்த பணிப்பெண்ணை அரசன் ஓவியத்தில் கண்டு விட்டானே என்று இராணி திகைத்தாள். அவள் ஒன்றும் பேசாமல் வாளா இருந்தாள். அரு கிலிருந்த வசுலட்சுமி “அவள் பெயர் மாளவி” என்று கூறினாள். "மாளவி! மிகவும் எழிலாக இருக்கிறாள்” என்று அரசன் கூறினான்.

படத்தில் மாளவியைக் கண்ட அரசன் அவளை நேரில் காண வேண்டுமென்று கருதினான். ஆனால், அவன் இராணியிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. அரசிக்குத் தெரியாமல் அவளைக் காணவேண்டுமென்று எண்ணினான். இதை அரசி அறிந்தால் தன்மீது கோபங் கொள்வாள் என்று அஞ்சினான். என்னசெய்வது என்று சிந்தித்தான். தனியே இருந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அரண்மனையில் விதூஷகனாக இருந்த கௌதமன் என்னும் பார்ப்பனன் அங்கு வந்தான். இவனைக் கொண்டு காரியத்தை முடிக்கலாம் என்று கருதி அரசன் அவனை அருகில் அழைத்து ரகசியமாக தன் கருத்தை அவனிடங் கூறினான். விதூஷகன் அரண் மனையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் அறிந்தவனாகையால், "மாளவியா! மாளவி கணதாசனிடம் நாட்டியக் கலை கற்று வருகிறாள்" என்று அரசனிடஞ் சொன்னான். “அவளை நான் காணும்படிச் செய்ய வேண்டும்” என்று அரசன் அவனிடம் கூறினான். விதூஷகன் அதற்குச் சம்மதித்தான்.