உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மாளவியும் அக்கினிமித்திரனும்

அக்கினிமித்திரன் என்னும் அரசன் விதீச நகரத்தில் தன்னுடைய அரண்மனையில் மூத்த இராணி தாரிணியுடனும் இளைய இராணி ஐராவதியுடனும் இனிது வாழ்ந்து வந்தான். அரண்மனையின் நாடக அரங்கத்தில் நாட்டிய நாடகங்களை நடத்துவதற்கு இரண்டு கலைஞர்கள் நியமித்திருந்தான். கணதாசன் என்றும் அரதத்தன் என்றும் பெயர் பெற்றிருந்த அவர்கள் நாட்டிய நாடகக் கலைகளில் வல்லவர்கள். இவர் களுடைய கலைகளில் இவர்களுக்குத் தனிமதிப்பு உண்டு. பண்டிதர் முதல் பாமரர் வரையில் எல்லோரும் இவருடைய நாட்டிய நாடகங்களைக் கண்டு ரசித்து மகிழ்கிறார்கள். ஆகவே எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகிற இந்தக் கலை மிகச் சிறந்தது என்பது இவர்களுடைய உறுதியான நம்பிக்கை. அரண்மனையில் நாடகங்களும் நடனங்களும் நாள்தோறும் நடந்துகொண்டிருந்தன.

தாரிணி இராணியிடம் புதிதாக ஒரு ஊழியப் பெண் வந்து வேலைக்கு அமர்ந்தாள். அவளுடைய அழகும் தோற்றமும் நடையுடை பாவனைகளும் அவள் உயர்ந்த குலத்தில் பிறந்தவள் என்பதைக் காட்டின. ஆனால், அவள் தன்னை ஏழைப் பெண் என்று சொல்லிக் கொண்டாள். அவளுடைய பெயர் மாளவி. இராணி அவளைத் தன்னுடைய சொந்த ஊழியப் பெண்ணாக அமைத்துக் கொண்ட பிறகு அப்பெண்ணின் இளமையும் வனப்பும் தோற்றமும் அரசனுடைய மனத்தைக் கவர்ந்துவிடுமோ என்று அஞ்சினாள்.

ஆகவே அவளை அரசனுடைய கண்ணில் படாதபடி மறைத்து வைக்கக் கருதினாள். தன்னுடைய ஆளான கணதாசனை அழைத்து அவளிடம் மாளவியை ஒப்பித்து அவளுக்கு நடனக் கலையைக் கற்பிக்கும்படியும் அவளை ஒருவரும் காணாதபடி தனியே வைத்திருக்கும்படியும் கட்டளையிட்டாள். நாடகாசிரியன் கணதாசன் அரசியின் கட்டளைப்படி தன்னுடைய இல்லத்தில் மாளவியை வைத்து நடனக் கலையைக் கற்பித்துக்கொண்டிருந் தான். மாளவி நடனக் கலையை நன்றாகப் பயின்று வந்தாள். அதுபற்றி அவளைக் கணதாசன் பாராட்டினான். எத்தனையோ மாணாக்கர்களுக்கு நான் கலைகளைக்