உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

அமர்ந்தார்கள். மூத்த ராணி தாரணியும் இளைய ராணி ஐராவதியும் வந்திருந்தனர். முதலில் மூத்த ஆசிரியராகிய கணதாசனின் மாணவி மாளவி அரங்கின் மேல் ஏறி ஆடினாள். மூத்த இராணி அரசன் மேல் சந்தேகப்பட்டாள். மாளவியைப் பார்ப்பதற்காக அரசன் குழ்ச்சிசெய்து இந்தப் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறான் என்று அவள் கருதினாள். அரசனுக்கு மாளவியை நேரில் காண நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.

ஆடல் பாடல்கள் ஆரம்பமாயின. மத்தளம் முழங்கிற்று. யாழும் குழலும் இசைத்தன. பாடலுக்கு ஏற்ப மாளவி அபிநயம் பிடித்து நாட்டியம் செய்தாள். அவளுடைய ஆடலும் அழகும் பாட்டும் முறைப்படி செம்மையாகவும் ஒழுங்காகவும் இருந்தன. அவளுடைய ஆடலை எல்லோரும் மெச்சிப் புகழ்ந்தார்கள். அரசனுக்குப் பெரும் மகிழ்ச்சியாயிற்று. அடுத்தபடியாக, அரதத்தரின் மாணவி நடனம் ஆட வேண்டும். அதைத் தொடங்குகிற சமயத்தில், அரண்மனை வைதானிகரின் பாடல் கேட்டது. நேரம் பிற்பகல் ஆகிவிட்டது என்பதைத் தெரிவிப்பது தான் வைதானிகர் பாடல். அதைக் கேட்ட அரசன் "நேரமாய் விட்டது. அடுத்த நிகழ்ச்சியை இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்வோம்” என்று கூறி எழுந்தான். எல்லோரும் அரங்கத்தை விட்டுச் சென்றார்கள்.

அரசன் விதூசகனைத் தனியே அழைத்து, மாளவியைத் தான் நேரில் காண்பதற்கு வழி செய்ததற்காக அவனை மெச்சினான். பிறகு, மாளவியின் மேல் தான் காதல் கொண்டதைத் தெரிவித்து எப்படியாவது அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அரசிகள் இதற்கு விரோதமாக இருப்பார்கள் என்றும் அவ்வாறு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கூறினான். விதூசகனும் அதற்குச் சம்மதித்தான்.

அரண்மனைப் பூங்காவில் அசோகமரம் மலர்வதைக் காண்பதற்கு அரசியர் சென்று பார்க்க ஏற்பாடாகி இருந்தது. இராணி தாரணியின் ஊழியப் பெண்ணாகிய மாளவி அச் சமயம் அரசியுடன் வருவாள் என்று விதூசகன் அறிந்தான். உடனே அரசனிடம் வந்து அவளைச் சந்திப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறினான். உடனே அரசர் விதூசகனுடன் பூஞ்சோலைக்கு வந்தான். அங்கு அசோக மரத்தண்டை மாளவி தனியே இருந்தாள். மூத்த இராணிக்குக் காலில் சிறிதுவலி ஏற்பட்டிருப்பதனால் அவள் அங்கு வர வில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை அரசன் பயன்படுத்திக்கொண்டு,