உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

கொள்வது கூடாது. இதற்கு மாறாக நடந்தால் உன்னை விட்டுப் போய்விடுவேன்”

இவ்வாறு கனவில் வந்து யானை சொல்லியதைக் கேட்ட உதயணன் அதை நனவில் கேட்பதாகக் கருதி அதன்படியே நடந்து கொண்டான்.

ஒரு நாள் சேடக முனிவரின் ஆசிரமத்துக்குச் சேதி நாட்டரச னான விக்கிரன் வந்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். அரசாட்சியில் தனக்கு வெறுப்பு ஏற்பட் டிருக்கிறதென்றும் தான் துறவு பூண்டு காட்டுக்குப் போய்த் தவம் செய்ய விரும்புவதாகவும் அவன் தன் தந்தையிடம் கூறினான். தனக்குப் பிள்ளைப் பேறில்லாதபடியால் ஆட்சியை.......

சேதி நாட்டுக்கு அரசனான உதயணன் தலைநகரமான வைசாலியில் இரந்து அரசாண்டான். தன்னுடைய நண்பனும் தன்னுடன் இசை பயின்றவனுமான யூகியைத் தன்னுடைய அமைச்சனாக்கினான். தன்னுடைய யானையைப் பட்டத்து யானையாக்கினான். இவ்வாறு சேதிநாட்டை அரசாண்டு கொண்டிருந்தபோது இவனுடைய தந்தையான வத்த நாட்டரசன் துறவு கொள்ள எண்ணித் தன்னுடைய மகனான உதயணனை அழைத்து வத்தநாட்டரசனாகப் பட்டங்கட்டி முடி சூட்டி வைத்து, தவஞ் செய்யக் காட்டுக்குப் போய்விட்டான்.

ஆகையால், உதயணன் சேதி நாட்டுக்கும் வத்தநாட்டுக்கும் அரசனாகி இரண்டு நாடுகளையும் அரசாண்டு கொண்டிருந்தான். அவன் சுற்றுப்புறங்களில் இருந்த நாடுகளின் மேல் படை யெடுத்துச் சென்று அந்த நாடுகளை வென்று தன்னுடைய இராச்சியத்தை ரிவுபடுத்தினான். அந்தப் போர்களில் அவனுடைய யானை அவனுக்குப் பெரியதும் உதவியாக இருந்தது.

அரண்மனையில் நாடக அரங்கத்தில் ஆடல் பாடல்களும் நாட்டிய நடனங்களும் நிகழ்ந்துகொண்டிருந்தன. இசைக் கலையில் தேர்ந்தவனான உதயண அரசன் ஆடல் பாடல்களை கண்டுங் கேட்டும் மகிழ்ந்து கொண்டிருந்தான். ஒரு நாள் நாடக அரங்கத்தில் நிகழ்ந்த இசையுங் கூத்தும் அவனுடைய மனதைப் பெரிதுங் கவர்ந்தமையால் பசியையும் மறந்து அவன் கலைகளை ரசித்துக் கொண்டிருந்தான். கடைசியில் பசியினால் அவன் சோர்வடைந்து