உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

185

விட்டான். நேரங்கழித்து உணவருந்திய அவன் பிறகு தன்னுடைய கோடபதி யாழை எடுத்து இசைத்துக் கொண்டிருந்தான். யாழின் இனிய இசை அரண்மனை முழுவதும் பரந்து இசைத்தது. வழக்கம் போல அங்கு வந்து இசையைக் கேட்டுக்கொண்டிருந்த யானை அன்று அங்கு வரவில்லை. உதயணன் அதன் காரணத்தை சிந்தித்துப் பார்த்தான். யானைக்கு முதலில் உணவு கொடுத்து பிறகு தான் உணவு கொள்ளும் வழக்கத்துக்கு மாறாக இன்று அதற்கு உணவு கொடுக்கும் முன்பு தான் உணவு கொண்டபடியால் யானை வரவில்லை என்பதை யுணர்ந்தான். தான் செய்த தவறுக்காகப் பெரிதும் மனம் வருந்தி அதைத் தேடி கண்டுபிடிக்கும்படி சேவகர்களை நாற்புறமும் அனுப்பினான். சேவகர்கள் பல இடங்களிலும் சென்று தேடிப் பார்த்தும் யானை காணப்படவில்லை.

தான் அன்பாகப் பழகிய யானையைப் பிரிந்திருக்க அவனால் முடியவில்லை. உதயணன் தானே காட்டுக்குப் போய் யானையைத் தேடத் தொடங்கினான். காட்டில் யாழ் வாசித்துக் கொண்டு யானையைத் தேடினான். யாழின் இசையைக் கேட்டு யானை வரும் என்று அவன் கருதினான்.

காட்டில் நெடுந்தூரஞ்சென்று அவன் யாழ் வாசித்தபோது தூரத்தில் ஒரு பெரிய யானை தன்னை நோக்கி வருவதைக் கண்டான். கண்டு அது தன்னுடைய யானை என்று கருதித் தன்னுடன் இருந்தவர்களைத் தூரத்தில் இருக்கச் சொல்லித் தான் மட்டும் யானையை நோக்கி யாழ் வாசித்துக் கொண்டே சென்றான். யானையும் அவனை நோக்கி அவன் பக்கமாக வந்துகொண்டிருந்தது. அருகில் வந்தவுடன் யானை நின்றது. அப்போது அதன் உடம்பிலிருந்து சில போர் வீரர்கள் வெளிப்பட்டு வந்து உதயணனைப் பிடித்துச் சிறைப்படுத்திக் கொண்டு போனார்கள்.

காட்டில் வந்த யானை உண்மையான யானையன்று. யானை போல செய்யப்பட்ட ஒரு பொய்யுருவம் அது. அது பொறிகளின் உதவியால் இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பொய் யானையின் உடம்பில் புகுந்துகொண்டு அந்த வீரர்கள், யானை உதயணனுக்கு அருகில் வந்துவுடன் அதனுள்ளிருந்து வெளிப் பட்டு அவனைச் சிறைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.