உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மாதவி: காவிரிப்பூம்பட்டினத்தில்

கலைச் செல்வி

செல்வமும் நாகரிகமும் செழித்திருந்த காவிரிப்பூம் பட்டினத் திலே கணிகையர் குலத்திலே பிறந்த சித்திராபதி என்பவள் இசை நடனக் கலைகளைக் கற்றுத் தேர்ந்து சிறப்பாக வாழ்ந்து வந்தாள். அவள் தன் மதிப்புள்ளவள். தன்னுடைய குலத்தைப் பற்றியும் தன்னுடைய கலைகளைப் பற்றியும் பெருமையாகப் பேசிக் கொள்வாள். முன் ஒரு காலத்திலே தேவலோகத்திலே இந்திர சபையிலே மாதவி என்னும் நாடக மடந்தை இருந்தாளாம். ஒரு சமயம் அவள் இந்திர சபையில் நடனம் ஆடினபோது அங்கிருந்த சயந்தகுமரன் மேல் காதல் கொண்டு நடனத்தை முறைப்படி ஆடாமல் தவறாக ஆடினாளாம். அதனால் அவள் மேல் சினங் கொண்ட நாடக ஆசிரியராகிய நாரதர் அவளை மண்ணுலகத்தில் பிறக்கும்படி சாபங் கொடுத் தாராம்.

அந்தச் சாபத்தின் காரணமாக மாதவி காவிரிப் பூம்பட்டினத் திலே மனிதப்பெண்ணாகப் பிறந்து இசைக்கலை நாடகக் கலைகளைப் பயின்று வாழ்ந்தாளாம். அவளுடைய மரபிலே பிறந்த கணிகையர் பலர் பரம்பரை பரம்பரையாக இசை நாடகக் கலைகளைக் கற்றுப் பேரும் புகழும் பெற்று வாழ்ந்தார்களாம். அந்தப் பேர்பெற்ற பரம்பரையில் வந்தவள் தான் சித்திராபதியாகிய நான் என்று அவள் தன் பரம்பரை வரலாற்றைக் கூறிப் பெருமிதமடைந்தாள்.

இளமையில் நடனமாடியும் இசைபாடியும் கலை நிகழ்ச்சி களைச் செய்து வந்த சித்திராபதி இப்போது வயது முதிர்ந்தவளாகையால் அரங்கத்தில் ஏறி ஆடுவதில்லை. இப்போது அவளுடைய தொழில் தோரிய மடந்தைத் தொழில். அதாவது நாடக அரங்கத்தில் நாட்டியம் ஆடுகிறவர்களுக்குப் பின் பாட்டுப் பாடுவது.

சித்திராபதிக்கு ஒரு பெண் மகள் இருந்தாள். அவளுடைய பெயர் மாதவி. சித்திராபதி தன் மகள் மாதவிக்கு ஆடற், பாடற் கலைகளைக் கற்பித்தாள். ஐந்து வயது தொடங்கிப் பன்னிரண்டு வயது வரையில் ஏழு ஆண்டுகளாக மாதவி இசைக் கலை, நாட்டியக்