உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

அதையும் அவன் சோதித்துப் பார்த்து இதுவும் வேண்டாம், வேறு வீணை கொண்டு வரும்படி கூறினான். அதையும் சோதித்துப் பார்த்து; இதுவும் வேண்டாம் வேறொரு நல்ல வீணை கொண்டுவா என்று சொன்னான். இன்னொரு வீணை கொடுக்கப்பட்டது. அதை வாங்கிச் சோதித்துப் பார்த்து, “இது நல்ல வீணைதான். ஆனாலும் இதைவிட வேறு நல்ல வீணையைக் கொடு” என்று கேட்டான். “ஏன்? இதில் என்ன குற்றம் இருக்கிறது?” என்று கேட்டாள் தோழிப் பெண். “இது குற்றம் இல்லாத நல்ல வீணைதான். இதைவிட நல்ல வீணை அரண்மனையில் இருக்கிறது. அதைக் கொண்டு வாசிக்கலாம்" என்று கூறினான் வாசுதேவகுமரன்.

66

வந்தால்

‘அது எந்த வீணை?" என்றுகேட்டார் அரண்மனை இசையாசிரியர். வாசுதேவன் கூறினான்: “ஆதிகாலத்தில் உலகத்திலே நான்கு தெய்வவீணைகள் இருந்தன. அவற்றின் பெயர் கோஷணை யாழ், சுகோஷணை யாழ், மகாகோஷணை யாழ், கோஷவதி யாழ் என்பன. அந்த நான்கு யாழ்களில் இப்போது இரண்டு யாழ்கள் உலகத்தில் இல்லை; அவை மறைந்து தெய்வலோகத் துக்குப் போய்விட்டன. இப்போது உலகத்தில் இருப்பவை மகாகோஷனை யாழும், கோஷவதி யாழுந்தான். இவ்விரண்டு யாழ்களில் கோஷவதி யாழ் பரம்பரை பரம்பரையாக இந்த அரண்மனையில் இருந்து வருகிறது. அந்த யாழை இங்கு அழைப் பித்தால் அதை வாசிக்கலாம்.'

وو

இதைக் கேட்டபோது சபையிலிருந்தவர் வியப்படைந்தனர். 'இப்படியொரு யாழ் இருக்கிறதா? இது வரையில் இந்தச் செய்தி ஒருவருக்குந் தெரியவில்லையே' என்று கூறி அவர்கள் அதிசயப் பட்டார்கள். ‘இவனுக்கு இந்த யாழைப் பற்றின விஷயம் எப்படித் தெரிந்தது,' என்று மன்னனும் ஆச்சரியப் பட்டான். 'இவன் இசைக் கலையையும் இசை மரபையும் அறிந்தவன் போலத் தெரிகிறான். இவன் இப்போட்டியில் வெற்றியடைவான்' என்று சபையோர் கருதினார்கள்.

அமைச்சரும் இசைப் பேராசிரியர்களும் அரசனை நோக்கினார்கள். அரண்மனையில் உள்ள கோஷவதி யாழைக் கொண்டு வரும்படி மன்னன் சேவர்களுக்குக் கட்டளையிட்டான். அரண்மனையிலிருந்து கோஷவதி யாழ் சபைக்குக் கொண்டு வரப்பட்டது. எல்லோரும் அதை வியப்புடன் நோக்கினார்கள்.