உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

199

கள். அரசனும் பரிவாரங்களுடன் வந்து ஆசனத்தில் அமர்ந்தான். அரச குமாரி காந்தருவதத்தை தோழிமாருடன் வந்து அரங்க மேடையில் அமர்ந்தாள். முதலில் சபை மரியாதைக்காக அவள் யாழ் வாசித்து இசைபாடினாள். பிறகு இசைப்போட்டி தொடங்கியது. வெற்றி தோல்வி களைக் கூறுவதற்கு நடுவர்களாகச் சில இசையாசிரியர்கள் சபையில் இருந்தார்கள்.

போட்டிக்கு வந்தவர் ஒருவர் பின் ஒருவராக மேடைக்கு வந்து இசை பாடியும் யாழ் வாசித்துஞ் சென்றார்கள். நன்றாக இசை பாடினவர் யாழ் வாசிக்கத் தவறிவிட்டார்கள். நன்றாக யாழ் வாசித்தவர் செம்மையாக இசைபாடவில்லை. பாட்டைப் பாடி யாழ் வாசித்தவர்களிடத்திலும் சில குறைகள் காணப்பட்டன. ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ ஒரு குறை காணப்பட்டது. வெற்றி பெற வேண்டிய முறைப்படி யாரும் இசை பாடவும் இல்லை; யாழ்வாசிக்கவும் இல்லை. இசையில் வல்லவர்கள் என்று தங்களை உயர்வாக மதித்துக் கொண்டிருந்தவர் வெற்றி பெறாமல் ஏமாற்றம் அடைந்தார்கள். போட்டிக்குப் பலபேர் வந்திருந்த படியால் இன்னும் போட்டி முடிவுபெற நெடுநேரம் ஆயிற்று. இத்தனை பேரில் ஒருவரேனும் வெற்றி பெறாத படியால் காந்தருவதத்தைக்குத் திருமணம் நடைபெறாது போலிக்கிறதே என்று அரசன் கவலை யடைந்தான். அமைச்சர்களும் அவ்வாறே கருதினார்கள்.

இறுதி வரையில் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்த வாசுதேவ குமாரன் கடைசியாக மேடைக்கு வந்தான். இவனாவது வெற்றி பெறுவானா, பார்ப்போம் என்று சபையிலிருந்தவர் எண்ணினார்கள். சபையில் அமைதி ஏற்பட்டது. எல்லோரும் மேடையை நோக்கினார் கள். இவனோடு இசை பயின்று போட்டியில் தோற்றுப் போனவர்கள் இவன் மேடைக்கு வந்ததைக் கண்டு பரிகாசம் செய்தார்கள். 'யாரும் சாதிக்க முடியாததை இவன் சாதிக்க வந்துவிட்டான்' என்று இகழ்ந்து பேசினார்கள். இவனுடைய ‘முட்டாள் தனத்தை' அவர்கள் முன்னமே அறிந்திருக்கிறார்கள் அல்லவா?

தோழிப் பெண் ஒருத்தி ஒரு வீணையைக் கொண்டுவந்து வாசு தேவனிடங் கொடுத்தாள். அவன் அதைக் கைகளில் வாங்கித் தண்டையும் பத்தரையும் தட்டிப் பார்த்தான். நரம்பு களைத் தெரித்துப் பார்த்தான். பிறகு, இது வேண்டாம் வேறு வீணை கொடு என்று கேட்டான். தோழி வேறு வீணையைக் கொண்டுவந்து கொடுத்தாள்.