உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

வசுதேவன் இசைக் கலையில் வல்லவன். இசை பாடவும் யாழ் வாசிக்கவும் நன்றாகப் பயின்றிருந்தான். நகரத்தில் நடக்க இருக்கும் இசைப்போட்டியில் கலந்துகொண்டு இசையில் வென்று அரச குமாரியைத் திருமணஞ் செய்துகொள்ள அவன் எண்ணினான். அவன் நகரவாசியிடம் விடை பெற்றுக்கொண்டு நகரத்துக்குள்ளே வந்தான். இசைப்போட்டியில் இடம் பெறுவதற்கு இசையாசிரியரின் பரிந்துரை வேண்டுமல்லவா? ஆகவே அவன் மனோகர இசையாசிரியரிடஞ் சென்றான். இசையாசிரியர் இருக்கும் இடத்தைக் கேட்டறிந்து அவன் அவருடைய இல்லத்தை அடைந்தான்.

இசையாசிரியர் மனோகரிடத்தில் பல மாணவர் இசை பயின்று கொண்டிருந்தார்கள். வாசுதேவன் அவரிடஞ் சென்று வணங்கித் தனக்கு இசைப் பயிற்சி தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டான். இசையாசிரியர் அவனைப் பரிசோதித்துப் பார்த்து, தகுந்த இசை ப மாணாக்கன் என்றறிந்து அவனைத் தன்னுடைய மாணவனாக ஏற்றுக் கொண்டார். மற்ற மாணவர்களுடன் இவனுக்கும் இசை கற்பித்துக் கொண்டிருந்தார்.

இசைக் கலையில் தேர்ந்தவனான வாசுதேவன் தன்னுடைய இசைக்கலைத் திறமையை மற்ற மாணவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வந்தான். மறைத்தது மட்டுமல்லாமல் தன்னை இசை யறியாத மூடன் என்று அவர்கள் கருதும்படியும் நடந்து கொண்டான். வீணை வாசிக்கும்போது நரம்பைப் பிய்த்து விடுவான். வீணையின் தண்டை உடைப்பான். பத்தரைப் பொத்தல் செய்வான். இவனுடைய போக்கைக் கண்ட மற்ற இசை மாணாக்கர் இவனை முழு முட்டாள் என்று கருதி ஏளனஞ் செய்து நகையாடினார்கள் 'வாசுதேவன்தான் இசையை வென்று காந்தருவதத்தையைத் திருமணஞ் செய்யப் போகிறான்' என்று புகழ்வது போலப் பழித்தார்கள். ஆனால், இசையாசிரியருக்கு மட்டும் இவனுடைய இசைப் புலமை நன்றாகத் தெரிந்திருந்தது. அவர் இவனிடத்தில் நன்மதிப்புக் கொண்டிருந்தார்.

நாட்கள் கடந்தன. இசைப்போட்டிக்குரிய நாள் வந்தது. அரண் மனையில் அலங்காரஞ் செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் இசைப் போட்டிக்காரர் எல்லோரும் வந்து அமர்ந்திருந்தார்கள் அவர்களோடு வாசுதேவ குமாரனும் அமர்ந்திருந்தான். நகரப் பெருமக்களும் இசைப் போட்டியைக் காண வந்திருந்தார்கள். அமைச்சர்களும் வந்திருந்தார்