உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

233 நகரத்துக்குள் இசை பாடச் சென்றிருந்த அவனுடைய சீடர்கள் மாலையானபோது வந்து சேர்ந்தார்கள். ஏமநாதன் அவர்களை அருகில் அழைத்து தணிந்த குரலில் ஏதோ மெல்லப் பேசிக்கொண்டிருந்தான்.

இரவு நடுசாமம் ஆயிற்று ஊரடங்கிவிட்டது. நகர மக்கள் கதவடைத்துத் தங்கள் தங்கள் இல்லங்களில் உறங்கிக் கொண்டிருந் தார்கள். எங்கும் அமைதி நிறைந்திருந்த அந்த நள்ளிரவிலே ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுக் கதவு மெல்லத் திறந்தது. ஏமநாதனும் அவ னுடைய சீடர்களும் மூட்டை முடிச்சுகளுடன் வெளியே வந்தார்கள். மௌனமாக வீதிவழியே நடந்து சென்றார்கள். அவர்கள் நள்ளிரவில் ஒருவருக்கும் தெரியாமல் நகரத்தை விட்டுப் போய் விட்டார்கள்.

இரவு கடந்து வைகறையாயிற்று. கிழக்கு வெளுக்கத் தொடங்கிற்று. வானத்தில் மின்னிக் கொண்டிருந்த விண்மீன்கள் ஒளி மங்கி மறைந்து கொண்டிருந்தன. பொழுது விடிந்து ஊர் விழித்துக் கொண்டது. இன்று அரச சபையில் பேர் போன இரண்டு இசைப் புலவர்களுக்கு இசைப் போட்டி நடக்கப் போகிற நாள். நகரத்தில் இதே பேச்சாக இருந்தது. குறித்த வேளையில் மண்டபத்தில் மக்கள் வந்து சேர்ந்தார்கள். நகரப் பெருமக்களும், அமைச்சர்களும் மண்டபத்துக்கு வந்தார்கள். பாணபத்திரன் இசைக் கருவியுடன் வந்து அரங்கத்தில் அமர்ந்தான். குறித்த நேரம் வந்தும் ஏமநாதனோ இன்னும் வரவில்லை.

வரகுணபாண்டியன் பரிவாரங்களோடு வந்து சிம்மா சனத்தில் அமர்ந்தான். இசைப்புலவன் இன்னும் வராததைக் கண்டு சபையோர் மண்டபத்தில் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஏமநாதனோ அவனைச் சார்ந்தவர்களோ ஒருவரும் சபையில் காணப்படவில்லை.

ஏமநாதன் வராததைக் கண்ட அமைச்சர் சேவகரை அழைத்து ஏமநாதனை அழைத்துவர விரைந்து அனுப்பினார்.

விரைந்து சென்ற சேவகர் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டை யடைந்து அங்கு ஒருவரும் இல்லாததை யறிந்து, இசை யரங்கத்துக்குப் போயிருப்பான் என்று கருதி விரைந்து திரும்பி வந்தனர். ஏமநாதன் வீட்டின் இல்லாததை அமைச்சரிடம் அறிவித்தார்கள்.

அவனை எப்படியாவது கண்டுபிடித்து விரைவாக அழைத்து வரும் படி அமைச்சர் மீண்டும் சேவகரை அனுப்பினார். சேவகர் மறுபடியும் அங்குவந்து இசைப் புலவர் வீட்டில் இல்லாததைக் கண்டு அக்கம்