உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

பாணபத்திரன் சேரமான் பெருமாளின் சபையில் யாழ் வாசித்து இறைவனுடைய புகழைப் பாடினான். தேனினும் இனிய அவனுடைய இசைப் பாடல்களைக் கேட்டு எல்லோரும் இன்பக் கடலில் ஆழ்ந்து மகிழ்ந்தார்கள். அவனுடைய தேவகானத்தைப் புகழ்ந்து மெச்சினார்கள். சேரமான் பத்திரனுக்குப் பெரும் பொருளைப் பரிசாக அளித்தார். தன்னுடைய பொக்கிஷ அறையைத் திறந்து இன்னும் உமக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கொள்க என்று வேண்டினான். அரசர் பெருமான் ஈந்த பொருள்களே போதும், மேலும் எனக்குப் பொருள் தேவை யில்லை” என்று பத்திரன் வணங்கிக் கூறினான். பிறகு சேரமானிடம் விடை பெற்று மதுரைக்குத் திரும்பி வந்தான்.

66

சொக்கப் பெருமான் கோயிலுக்கு வந்து தான் கொண்டு வந்த செல்வத்தைக் கடவுள் திருமுன்பு வைத்து வணங்கினான். பிறகு வீட்டுக்குச் சென்று தான் கொண்டு வந்த பொன்னையும் பொருளையும் பாடினிக்குக் கொடுத்தான். தன் சுற்றத்தாருக்கும் பகிர்ந்து கொடுக்கச் சொன்னான்.

பாணபத்திரன் வறுமை நீங்கி வாழ்ந்தான். நாள்தோறும் திருக் கோயிலுக்குச் சென்று வழக்கம் போல பக்தி கலந்த இசைப் பாடலை வழங்கிக்கொண்டிருந்தான். அவன் கடவுளுக்கு வழங்கின இசை யமுதத்தை மக்களும் செவிமடுத்துக் கேட்டு மனம் மகிழ்ந்தார்கள். பாணபத்திரன் சொக்கப் பெருமானுடைய திருமக ஓலையைக் கொண்டுபோய்ச் சேரமானிடம் கொடுத்துப் பொருள் பெற்று வந்த செய்தியைப் பக்தனான வரகுண பாண்டியன் அறிந்தான். சேர மன்னன் கொடுத்தது போலவே தானும் பொருள் கொடுக்க எண்ணினான். நெல் வயல்களைப் பாணபத்திரனுக்குத் தானமாகக் கொடுத்தான்.

இவற்றைப் பெற்றுப் பாணபத்திரனும் பாடினியும் வறுமை இல்லாமல் வாழ்ந்து கடவுளின் மேல் இசைபாடிக் கொண்டிருந் தார்கள்.

பாணபத்திரனுடைய திருவுருவம் சிவன் கோயில்களில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இன்றும் போற்றப் படுகிறது.