உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

உட்கார வைத்துவிட்டு மீண்டும் பிச்சை எடுக்கப் போனார். வாங்கிவந்த பிச்சை உணவை அவர் களுக்குக் கொடுத்துத் தாமும் அருந்தினார். இவ்வாறு அன்று முதல், பிச்சை ஏற்றுத் தமது பெற்றோரைக் காப்பாற்றி வந்தார்.

நாளடைவில் இந்தப் பிக்கு உடல் மெந்து இளைத்துப் போனார். தாம் பெறுகிற பிச்சை உணவைத் தமது பெற்றோருக்குக் கொடுத்து மீந்த உணவை இவர் சாப்பிட்டபடியால் அது உடல் போஷிப்புக்குப் போதாமல் அவர் உடல் மெந்து இரத்தம் குறைந்து உடம்பு வெளுத்தது. அப்போது இவரைக் கண்ட மற்றப் பிக்குகள், "முன்பு உடம்பு நன்றாக இருந்தீர். இப்போது இப்படி மெலிந்து வெளுத்துக் காணப்படுகிறீர். உமக்கு உடம்பில் ஏதோ நோய் இருக்கிறது போலும்” என்று கூறினார்கள். பிக்கு, காரணத்தை அவர்களுக்குத் தெரிவித்தார். "பிச்சை ஏற்ற உணவைப் பிக்குகள் வீணாக்கக் கூடாது என்பது பகவர் ஆணை. மேலும், பிக்குகள் இல்லறத்தாருக்குத் தானம் வழங்குதல் கூடாது. நீர் உமது பிச்சை உணவைத் துறவிகள் அல்லாதவருக்குக் கொடுப்பது தவறு” என்று பிக்குகள் கூறியதோடு, இச்செய்தியைப் பகவன் புத்தரிடம் தெரிவித்தார்கள்.

66

பகவர், இந்தப் பிக்குவை வரவழைத்துக் கேட்க, இவர் என்று ஒப்புக்கொண்டார். “நீர்காப்பாற்றுகிற அந்த இல்லறத்தார் யார்?” என்று கேட்டார் பகவன் புத்தர். “வயதுசென்ற என் தாய் தந்தையர்” என்று விடை கூறினார் பிக்கு. உடனே பகவர் இவரைத் தட்டிக் கொடுத்து, “நீர் செய்வது நல்லது” என்று மும்முறை கூறினார். தாமும், முற்பிறப்பில் தமது பெற்றோரைக் காப்பாற்றியதாகவும் பிக்குகளுக்குக் கூறினார். பிக்குகள் அதைக் கூறும்படி கேட்க, பகவன் புத்தர் இந்தக் கதையைச் சொன்னார்.

முன் ஒரு காலத்திலே, வாரணாசிக்கு அருகிலே, ஒரு ஆற்றங் கரையிலே, ஒரு வேடர் கிராமம் இருந்தது. அந்த ஆற்றின் எதிர்க் கரையிலே இன்னொரு வேடர் கிராமமும் இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்நூறு குடும்பம் இருந்தது. இரண்டு ஊர்களின் வேட்டுவத் தலைவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் தமது வாலிப வயதிலே தமக்குள் பேசிக்கொண்டார்கள், தமக்குள் யாருக்கேனும் மகள் பிறந்தால், அந்த மகளை மற்றவருடைய மகனுக்கு மணம் செய்விக்கவேண்டும் என்று. சில காலஞ் சென்றபிறகு இக்கரையில்