உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

41

“சாமன் - உங்கள் பணிவுள்ள அழகான மகன் - அவனை நான் அம்பு எய்து கொன்றுவிட்டேன். அவனுடைய நீண்ட தலை மயிர் இரத்தந்தோய்ந்து கிடக்க, அவன் இறத்துவிட்டான்.’

புதியவர் ஒருவர் பேசும் குரலைக்கேட்ட சாமனுடைய தாயார், கயிற்றைக் கையினால் தடவிக்கொண்டே துகூலக முனிவரின் அருகில் வந்து நின்றுகொண்டிருந்தவள், தன் மகன் கொல்லப் பட்டதைக் கேட்டு மனம் துடித்தாள். தன் கணவனைப் பார்த்து, "இவர் யார்? நமது சாமன் இறந்தானா! ஐயோ! நமது இளைஞன் - கண்மணி சாமன் - இறந்து விட்டானா? இந்தச் செய்தி என் மனத்தை ஈட்டிபோல் குத்துகிறதே!” என்று சொல்லித் துடித்தாள்.

பெரியவர் கூறினார்: "இவர் வாரணாசி நாட்டுமன்னர். இவருடைய பொல்லாத அம்பு நமது சாமனைக் கொன்றுவிட்டது. சாமன் ஆற்றங் கரையில் இறந்து கிடக்கிறான். நீ இவரைச் சபித்து வையாதே.

66

وو

அருமைக் கண்மணி, ஆருயிர் சாமன். அவன் வருகையை எதிர்பார்த்திருந்தேனே! அவனைக் கொன்றவரைக் கோபிக்காமல் என் மனம் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கும். ஐயோ சாமா!"

கண்மணி சாமன். ஆருயிர் மகன். அவன் வரவை எதிர் பார்த்திருந்தோம். ஆனால், தவறு செய்தவரையும் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்று துன்பத்தோடு கூறினார் முனிவர்.

பெற்றோர் இருவரும் மார்பில் அறைந்துகொண்டு தலையில் அடித்துக்கொண்டு சாமனை நினைத்து அழுதார்கள். அவனுடைய அறிவையும் அழகையும் அன்பையும் குணங்களையும் கூறி அரற்றினார்கள். துன்பத்தில் மூழ்கி வருந்தினார்கள்.

அப்போது அரசன் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்: "பெரியோர்களே! துன்பப்படாதீர்கள். உங்களை வேண்டிக் கொள்கிறேன். உங்களை நான் பராமரித்துக் காப்பாற்றுவேன். காட்டிலிருந்து காய்கனி களையும் ஆற்றிலிருந்து நீரையும் கொண்டு வந்து கொடுப்பேன். உங்களுக்குப் பணிவிடை செய்து உங்களின் ஊழியனாக இருப்பேன். கவலைப் படாதீர்கள்" என்று சொல்லித் தேற்றினான்.

அரசன் கூறியதைக்கேட்டு அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “தாங்கள் அரசன், நாட்டை ஆள்பவர். தாங்கள் இப்படிச் சொல்வது தகாது.

66