உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

59

அரண் மனைக்கு வந்து நிற்கும் இடம் ஆகும் என்று அறிந்து அமைச்சர் களைப் பார்த்து, “பிரத்தியேக புத்தர் அரண்மனைக்கு வந்தால் அவர் எங்கே நிற்பது வழக்கம்?” என்று கேட்டார். அவர்கள் அவ்விடத்தைக் காட்டினார்கள். மகாஜனகன் அந்த இடத்தைத் தோண்டி அங்கிருக்கிற செல்வப் புதையலை எடுக்கச் சொன்னார். அவர்களும் அவ்விடத்தைத் தோண்டியபோது, செல்வப் புதையலைக் கண்டு அதை வெளியே எடுத்தார்கள். “பிரத்தியேக புத்தர்கள் அரண் மனையில் உணவு அருந்தித் திரும்பிப் போகும்போது அரசர் பெருமான் அவர்கள் பின் சென்று வழிவிடுவது வழக்கம் அல்லவா? எந்த இடத்தில் நின்று வழி யனுப்புவார்? “என்று மகாஜனகன் அமைச்சர்களைச் கேட்டபோது, அவர்கள் அந்த இடத்தைக் கூறினார்கள். அரசன் அந்த இடத்தைத் தோண்டி அங்கிருந்த புதையலை எடுக்கச் சொன்னார்.

இவ்வாறு புதையல்களை மகா ஜனக மன்னன் எடுத்தபோது எல்லோரும் வியப்படைந்து அரசனுடைய அறிவைப் புகழ்ந்தனர். தோன்றும் பகலவன், மறையும் பகலவனென்றால், சூரியன் புறப்படு கின்ற இடம், சூரியன் மறைகின்ற இடம் என்று அர்த்தம் செய்து கொண்டு எங்கெங்கேயோ தோண்டிப்பார்த்து ஏமாந்து போனோம். இப்பொழுதுதான் இதன் உண்மைப் பொருள் தெரிந்தது என்று கூறி அவர்கள் அரசனுடைய நுண்ணறிவைப் புகழ்ந்தார்கள். அகநிதி என்பது, அரண்மனையின் வெளிவாயிலுக்கு உள்பக்கம் உள்ள நிதி என்றும், புறநிதி என்பது, அரண்மனை வாயிலுக்கு வெளிப்புறத்தில் உள்ள நிதி என்றும் அரசன் யூகித்து அந்த இடங்களைத் தோண்டும்படி கட்டளையிட்டார். தோண்டியபோது அவ்விடங்களில் செல்வப் புதையல்கள் இருந்ததைக்கண்டு அவைகளை வெளியே எடுத்தார்கள். அகப்புறநிதி என்பது அரண்மனை வாயிலுக்கு உள்பக்கமும், வெளிப் புறமும் இல்லாமல், வாயிலுக்குக் கீழே உள்ள புதையல் என்று அறிந்து அவ்விடத்தையும் தோண்டிப் புதையலை எடுத்தார்.

ஏறும் நிதியை எடுப்பதற்காக, அரசன் அமைச்சரைப் பார்த்து, “காலஞ் சென்ற அரசன் பெருமான் யானைமேல் ஏறுவதற்காக மரப்படியை வைக்கும் இடம் எது?” என்று கேட்க, அவர்கள் அவ்விடத்தைக் கூறினார்கள். அவ்விடத்தைத் தோண்டி அங்கிருந்த புதையலை அரசர் எடுத்தார். பிறகு, அரசர் பெருமான் யானையினின்றும் இறங்கும் இடத்தை அறிந்து அவ்விடத்தையும் தோண்டி அங்கிருந்த செல்வத்தை எடுத்தார்.