உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

/61

பிறகு, மகா ஜனகராசன், காளசண்பை நகரத்திலிருந்த தன் னுடைய தாயையும் பிராமணனையும் வரவழைத்து அவர்களுக்குப் பெரிய சிறப்புகளைச் செய்தார்.

விதேக தேசத்தில் மகா ஜனக அரசன் நீதியோடு செங்கோல் செலுத்தினார். மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து அரசர் பெருமானைக் காண்பதற்குத் திரண்டு வந்தார்கள். அரண்மனையைச் சூழ்ந்து கொண்டு, தாங்கள் கொண்டுவந்த கையுறைகளை அரசனுக்கு அளித்து மனம் மகிழ்ந்தார்கள். திருவிழாக் கொண் டாடி சந்தோஷப்பட்டார்கள். மக்களுக்குத் துன்பம் நேராமல் அரசன் செங்கோல் செலுத்தினார்.

-

அறுசுவை உணவு அருந்திப் பட்டாடை அணிந்து, அரசி யுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து, ஒருபுறம் அமைச்சரும் சேனாபதி முதலியோரும், மற்றொருபுறம் செல்வரும் பிரபுக்களும் இருக்க நாடகங் கள் கண்டும், இன்னிசை கேட்டும் மகிழ்ச்சியாகக் காலங் கழித்தார். இந்திரலோகத்திலே தேவ சபையிலே தேவேந்திரன் வீற்றிருப்பது போல மகா ஜனக மன்னன் அரசபோகத்தை அனுபவித்தார். அப்போது முன்பு நடுக்கடல் கப்பல் மூழ்கித்தான் கடலில் நீந்தித் துன்புற்றதைக் கருதினார். கருதி, “மனிதனுக்கு முயற்சி மிக முக்கியமானது. கடலில் விழுந்து தத்தளித்தபோது, மன உறுதியும் ஊக்கமும் கொண்டு முயற்சி செய்திராவிட்டால், இந்தப் போகங்களை எல்லாம் இப்போது அனுபவிக்க முடியுமா?” என்று தமக்குள் எண்ணி மகிழ்ந்தார்.

இவ்வாறிருக்கும்போது சீவாலி தேவியார் எல்லா நலமும் அமைந்த ஒரு ஆண் மகவைப் பெற்றார். அந்தக் குழந்தைக்குத் தீகாவு குமரன் என்று பெயரிட்டார்கள்.அந்தக் குமாரன் பெரிய வனாக வளர்ந்தபிறகு அவனுக்கு இளவரசுப் பட்டங் கட்டினார்.

ஒருநாள் தோட்டத்தில் இருந்து பலவிதமான பூக்களையும் பழங்களையும் பறித்துக்கொண்டு வந்து அரசனுக்குக் காணிக்கையாகக் கொடுத்து வணங்கினார்கள். அரசன் மகிழ்ந்து தான் வந்து தோட்டங்களைக் காண விரும்புவதாகக் கூறினார். தோட்டக்காரர்கள் தோட்டத்தை அழகுப் படுத்தி வைத்தார்கள். அரசர் யானைமேல் ஏறி அமைச்சர் முதலிய குழுவினர் பின் தொடர்ந்து வர, தோட்டத்திற்குச் சென்றார். தோட்டத்தில் இரண்டு பெரிய மாமரங்கள் இருந்தன. ஒரு மாமரம் முழுவதும் பூத்துக் காய்த்துக் குலைகுலையாகத் தொங்கிற்று. மற்றொரு மாமரம் காய்க்காமல்