உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

இலை தழைகளால் நிறைந்திருந்தது. காய்த்துத் தொங்கிய பழங்களை, அரசர் பெருமான் அருந்தாதபடியினால், ஒருவரும் அவற்றைப் பறிக்காமல் இருந்தனர். மாமரத்தில் பழங்களைக் கண்ட அரசர், யானைமேல் இருந்த படியே ஒரு பழத்தைப் பறித்து அருந்தினார். பழம் மிகுந்த இனிப்பாக இருந்தது. திரும்பி வரும்போது பறித்துத் தின்னலாம் என்று தமக்குள் எண்ணிக் கொண்டு, தோட்டத்தின் காட்சிகளைக் காணச் சென்றார்.

அரசர் பெருமான் மாம்பழத்தை முதல் சாப்பிட்டபடி யால், அவர் உடன்வந்த இளவரசர், சேனாபதி, அமைச்சர்கள் முதலியவர்களும் மரத்தில் இருந்த மாம்பழங்களைப் பறித்து அருந்தினார்கள். மிகுந்த வற்றை யானைப்பாகர் தேர்ப்பாகர் முதலியவர்கள் பறித்து அருந்தினார் கள். பறிக்கும்போது இலை களையும் கொம்புகளையும் பிய்த்துப் போட்டார்கள். பழங்கள் நிறைந்து அழகாக இருந்த மரம் சற்று நேரத்திற் குள் காய்கனிகளை இழந்து இலைகளும் கிளைகளும் ஒடிக்கப்பட்டுப் பொலிவின்றிக் காணப்பட்டது. அருகில் இருந்த பழம் இல்லாத மரம் இலை தழைகளால் நிறைந்து அழகாகக் காணப்பட்டது.

அரசர் பெருமான் தோட்டத்தில் சென்று இயற்கைக் காட்சி களைக் கண்டு மகிழ்ந்து திரும்பினார். மாமரத்தண்டை வந்த போது, அது காய்கனிகள் இல்லாமலும் இலைகள் ஒடிக்கப்பட்டும் அழகு குன்றியிருப்பதைக் கண்டார். அமைச்சர்களை நோக்கி, “இது ஏன் இப்படியாற்று?” என்று கேட்டார். “அரசர் பெருமான் மாங்கனி அருந்திய பிறகு உடன்வந்த பரிவாரங்கள் இந்த மரத்தின் கனிகளைப் பறித்து அருந்தினார்கள். அவர்கள் கனிகளை அறுக்கும்போது இலை தழைகளையும் கொம்புகளையும் கிளைகளையும் ஒடித்து அழகைக் கெடுத்து விட்டார்கள்.” என்று கூறினார். “ஆனால், மற்ற மரம் முன் போலவே அழகாகக் காணப்படுகிறதே?” "அது காய்த்துப் பழுக்க வில்லை. ஆகவே, அதைப் பறித்துப் பிய்த்துப் போடவில்லை.

இவ்விடையைக் கேட்டு அரசர் பெருமான், மறுபடியும் அந்த மரங்களைப் பார்த்தார். அப்போது அவர் உள்ளத்தில் இவ்வாறு எண்ணம் தோன்றியது. 'இந்த மரம் காய்த்துப் பழுத்த படியால் இப்போது பொலிவு இழந்தது. அந்த மரம் காய்த்துப் பழுக்காதபடியால் பொலிவோடு இருக்கிறது. என்னுடைய அரச போகமும் இந்தப் பழுத்துப் பொலிவிழந்த மரம் போன்றது. துறவு வாழ்க்கை காய்த்துப் பழுக்காத அந்த மரம் போன்றது. பொருள் உள்ளவருக்குத்தான்