உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

63

துன்பம். பொருள் இல்லாதவருக்குத் துன்பம் இல்லை. பழுத்த மரத்தைப் போல இருக்கிற நான், பழுக்காத மரம்போல் ஆகவேண்டும். அரச பதவியையும் செல்வத்தையும் துறந்து, துறவறம் பூணவேண்டும் என்று தமக்குள் எண்ணினார். அரண்மனைக்கு வந்து யானையிலிருந்து இறங்கியவுடன் சேனாதிபதியை அழைத்து, அவரிடம் இவ்வாறு கூறினார்: “இன்று முதல் ஒருவரும் என்னைப் பார்க்கக்கூடாது. என்னிடம் இரண்டு ஆட்கள் மட்டும் வரலாம். ஒருவர் உணவு கொடுக்கவும். மற்றொருவர் தண்ணீர் கொடுக்கவும் மட்டும் வரலாம். அமைச்சர், அவையத்தார் துணைகொண்டு நீர் அரசாட்சியை நடத்தி வருக. நான் பிக்குவின் வாழ்க்கையைக் கொள்ளப் போகிறேன்."

இவ்வாறு கூறியபிறகு அரசர் பெருமான், அரண்மனையின் மேல்மாடியில் இருந்த அறைக்குச் சென்று தனியே இருந்து பிக்குவின் வாழ்க்கை மேற்கொண்டார். இவ்வாறிருக்க, அரசன் காணப்படாததைக் கண்டு குடிமக்கள் அரண்மனைக்கு வந்து, “அரசர் பெருமான் எங்கே?” என்று கேட்டார்கள். “அரசர் பெருமான் தன்னந்தனியே இருந்து பிக்குப்போல வாழ்கிறார். அவர், ஒருவரையும் பார்ப்பதும் இல்லை, பேசுவதும் இல்லை” என்று கூறினார்கள்.

நான்கு திங்கள் வரையிலும் மகா ஜனகராசன் தன்னந் தனியே இருந்தார். அப்போது அவருக்கு அந்த இடமும் நரகம் போலத் தோன்றிற்று. அந்த இடத்தைவிட்டு இமயமலைச் சாரலுக்குப் போய்விட வேண்டும் என்றும் எண்ணம் தோன்றிற்று. அவர் ஒரு ஆளை அனுப்பி, பிக்குகள் அணியும் மஞ்சள் ஆடை களையும் மண்பாண்டம் ஒன்றையும் வாங்கி வரும்படி அனுப்பினார். மற்றொரு ஆளை ஆ அனுப்பி அம்பட்டனை அழைத்துவரச் சொன்னார். அம்பட்டன் வந்த போது தலை மயிரையும் தாடி மீசைகளையும் மழித்துவிடும்படிக் கூறினார். அவனும் அப்படியே செய்து போய்விட்டான். பிறகு, அரசர் பெருமான் பிக்குகள் அணியும் சீவர ஆடைகளை அணிந்து மட் ஆ பாண்டத்தை ஒரு பையில் போட்டு அதைத் தோளில் மாட்டிக்கொண்டு ஒரு தடியைக் கையில் எடுத்துக்கொண்டு அறையில் உலாவினார். அப்போது அவர் பிரத்தியேக புத்தரைப்போலக் காணப்பட்டார்.

அரசர் பெருமானைக் கண்டு நான்கு திங்கள் ஆயின. அவரைக் காணவேண்டும் என்று சீவாலிதேவியார் நினைத்து அழகிலும், ஆடல் பாடல்களிலும் தேர்ந்தவரான எழுநூறு தாதிமார்களுடன் அரசர் இருந்த