உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

மேல்மாடிக்கு வந்தார். அரசியார் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது மஞ்சள் ஆடை அணிந்து ஒரு பிக்கு மாடியிருந்து படிகளில் இறங்கி வந்தார். அவர் யாரோ பிரத்தியேக புத்தர். அரசருக்கு உபதேசம் செய்ய வந்தவர் என்று எண்ணிக்கொண்டு அரசியார் ஒருபுறமாக ஒதுங்கி நின்று, வணக்கஞ் செய்தார். அவர் போனபிறகு அரசியார், மாடி மேலிருக்கும் அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஒருவரும் காணப் படவில்லை. களையப்பட்ட மீசை தாடி மயிர்களும் அங்கு இருந்தன. இதைக் கண்டபிறகு, படிவழியாக இறங்கிச்சென்ற பிக்கு, அரசர் பெருமான் என்று உணர்ந்து விரைவாகக் கீழே இறங்கிவந்து, தலைவிரி கோலமாக அழுது புலம்பிக் கொண்டு பிக்குவைப் பின் தொடர்ந்து சென்றார். தாதிகளும் அழுது புலம்பிக் கொண்டு பின்சென்றார்கள். ஏன் பிக்கு கோலம் பூண்டீர்? அரசர் பெருமானே!” என்று அவர்கள் அழுதுகொண்டே கேட்டார்கள். இந்தச் செய்தி நகரம் முழுவதும் பரவியது. “அரசர் பெருமான் துறவு பூண்டாராம். இவரைப் போன்ற நல்ல அரசரை எங்கே காணப்போகிறோம்?” என்று சொல்லி அவர்கள் வருத்தம் அடைந்தார்கள். எல்லோரும் சென்று எவ்வளவோ வேண்டியும் அவர் மனம் மாறாமல் நேரே வடக்கு நோக்கி நடந்தார். மக்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. அரசர், அமைச்சரிடம் சொல்லி மக்களைத் தொடர்ந்து வர வேண்டாம் என்று தடுத்தும் அவர்கள் கேளாமல் தொடர்ந்தனர். அரசியார், அரசரைப் பின்தொடர்ந்து சென்றார்.

66

99.66

அப்போது இமயமலையில் தவம் செய்யும் நாரதர் என்னும் முனிவர், மகா ஜனகராசன் துறவு பூண்டதையறிந்து, அரசனைக் காண வந்தார். வந்தவர் வழியிலே அரசனைக் கண்டு? “ஏன் இங்குக் கூச்சலும் சந்தடியுமாக இருக்கிறது?” என்று கேட்டார். “நான் துறவு பூண்டதற்காக இவர்கள் அழுது விசனப்படு கிறார்கள்.” “நீர் முழுவதும் துறவு பூண்டதாகக் கருதாதீர். உமக்கு இன்னும் பல தடைகள் உள்ளன. அத்தடைகளையும் நீர் வெல்ல வேண்டும்.” "அறிந்ததும் அறியாதது மான சுகபோகங்கள் என்னைத் தடுக்கமுடியாது. வேறு எந்தப் பகைவர் என்னைத் தடுக்க முடியும்?” “தூக்கம், சோம்பல், சிற்றின்ப ஆசை, பேருண்டி, திருப்தியற்ற மனம் - இவை எல்லாம் துறவுக்குப் பகைகள். இவைகளுக்குத் துறவிகள் இடந்தரலாகாது” என்று சொல்லிவிட்டுப் போனார். அவர் போனபிறகு மற்றொரு முனிவர், மிகாஜினர் என்னும் பெயருள்ளவர் இமயமலையிலிருந்து வந்து, மகா ஜனகனுக்கு எதிர்ப் பட்டார். அவர் துறவுகொண்ட அரசனைப் பார்த்து "யானை, சேனை, செல்வம், அரசாட்சி, போகம் முதலியவை களெல்லாம் இருந்தும் நீர் ஏன் துறவு கொண்டீர்? உமது மனம் வருந்தும்படி யாரேனும் உமக்குத்