உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

65

துன்பம் செய் தார்களோ?” என்று வினாவினார். “ஒருவரும் எனக்குத் துன்பம் செய்யவில்லை. நானே இல்வாழ்க்கையை வெறுத்துத் துறவு பூண்டேன்” என்று விடை கூறினார்.

66

குரு உபதேசம் இல்லாமல் ஒருவரும் துறவுபூண மாட் டார்கள். துறவறத்துக்கு வழிகாட்டும் குரு இல்லாமல் யாரும் துறவு கொள்வது இல்லை. உமக்கு உபதேசம் செய்த குரு யார்?"

66

எனக்கு உபதேசம் செய்தவர் ஒருவரும் இலர். காய்த்துப் பழுத்து நிறைந்த மாமரத்தையும், காய்க்காமல் இருந்த மரத்தையும் கண்டு, இல்லறத்தை வெறுத்துத் துறவு பூண்டேன்.

இதைக்கேட்ட மிகாஜின முனிவர் மனவுறுதியோடியிருக்கும் படி மகாஜனகருக்குச் சொல்விட்டுப் போய்விட்டார்.

அரசனைத் தொடர்ந்துவந்த சீவாலி அரசியார், "தங்கள் துறவுக்காக நாட்டு மக்களும் மற்றவர்களும் நாங்களும் அழுது துன்புறுகிறோம், எங்கள் துன்பத்தை நீக்கத் தாங்கள் வந்து அரசாளுங்கள்” என்று கூறினார்.

"எல்லோரையும், எல்லாவற்றையும் நான் துறந்துவிட்டேன். நாட்டை ஆள உன் மகன் தீகாவு இருக்கிறான்" என்று அரசர் விடை யளித்தார். அரசியார், அரசனை விடாமல் பின்தொடர்ந்தார். இவ்வாறு பேசிக்கொண்டே தூணா என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கு ஒரு ஆள், இறைச்சியை வாங்கிவந்து, அதை வாணலில் வறுத்து, உண்பதற்காக ஆறவைத்தான். அப்போது அங்குவந்த ஒரு நாய் ஒரு துண்டை வாயில் கௌவிக்கொண்டு ஓடியது. அதைக்கண்ட அவன் அந்த நாயைத் துரத்திக்கொண்டு ஓடினான். நாய் அகப்படாமல் ஓடிற்று. இருவரும் நெடுந்தூரம் ஓடினார்கள். கடைசியில் அந்த ஆள் களைப் படைந்து நின்று விட்டான். நாய் ஓடியது. அப்போது அத்துறவியும் அரசியும் அங்கு எதிரில் வருவதைக் கண்ட நாய் அச்சங்கொண்டு இறைச்சித் துண்டைப் போட்டுவிட்டு ஓடிற்று. அப்போது துறவியார் எண்ணினார். இந்த இறைச்சியை நாய் போட்டு விட்டு ஓடிவிட்டது. இதற்கு உரியவர் யாரும் இலர். இதை நான் எடுத்து உண்பேன்' என்று இவ்வாறு நினைத்து இறைச்சியை எடுத்துத் தூசியைத்தட்டி உதறி விட்டு அதைத் தமது மண் பாத்திரத்தில் வைத்துக் கொண்டார்.

பிறகு, நீர் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று கைகால்களைக் கழுவி உட்கார்ந்து அந்த இறைச்சியை எடுத்து அருந்தினார். இதைக் கண்ட அரசியார், 'இராச்சியத்தை அரசாளத்தக்க தகுதியுடையவராக இருந்தால், இவர் நாய் போட்டுவிட்டுப் போன இந்த மாமிசத்தை