உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

53

இதைக்கேட்ட போதிசத்துவர். ‘ஏழு நாட்களாகத் தன்னந் தனியே கடல் நீந்துகிறேன். இதுவரையில் ஒருவரையும் நான் காணவில்லை. ப்போது யாரோ பேசுகிற குரல் கேட்கிறது' என்று தமக்குள் எண்ணிக் கொண்டு, குரல் வந்த திசையை அண்ணாந்து பார்த்தார். ஆகாயத்தில் ஒரு தெய்வ மகள் நிற்பதைக் கண்டு, இத்தெய்வந்தான் பேசிற்று என்று அறிந்து இவ்வாறு விடை கூறினார்: "இவ்வுலத்தில் முயற்சியுடன் உழைக்கவேண்டியது என்னுடைய கடமை. ஆகையால் கரைகாணாத இந்தக் கடலிலே நான் நீந்திக் கரைகாண முயற்சி செய்கிறேன்.

66

கரைகாணாத இந்தக் கடற்பரப்பிலே, ஆழமுள்ள இந்தப் பௌவத்தைக் கையினால் நீந்திக் கரைகாண முடியுமா? இது வீண் முயற்சி. நீ கடல் மூழ்கி இறக்க வேண்டியவன்தான்.

66

و,

“தெய்வ மகளே! ஏன் இவ்வாறு கூறுகிறாய்? ஊக்கத்தோடும் உறுதியோடும் முயற்சிசெய்த பின்பு மூழ்கி இறந்து விடுவே னானால் அது என்னுடைய குற்றம் அல்ல. ஊக்கத்தோடு முயற்சி செய்யாமல் உயிரை இழப்பேனானால், அது என்னுடைய தவறு ஆகும். ஊக்கமும் உறுதியும் உள்ளவனைத் தெய்வம் காப்பாற்றும். முயற்சி செய்த பிறகும் இறந்து விடுவேனானால், அப்போதும் எனக்கு மன ஆறுதல் ஏற்படும்."

"வீணாக உழைப்பதனால் என்ன பயன்? ஊக்கங்கொண்டு உழைத்தாலும் கடலிலே மூழ்கி இறக்க வேண்டியதுதானே கை கண்ட பலன்! முயற்சியில் வெற்றிகாணாமல் உடல்வருந்தி இறக்கப் போகிறாய்!'

"முயற்சிக்குத் தகுந்த பலன் உண்டு. என்னுடன் கப்பலில் வந்தவர்கள், கப்பல் முழுகிப் போவதைக் கண்டு மனவுறுதி இழந்து முயற்சி செய்யாமல் மாண்டு போனார்கள். நான் மட்டும் மன உறுதி இழக்காமல் முயற்சி செய்கிறேன். ஏழு நாட்களாகக் கடலில் சுழன்று அலைகிறேன். இப்போது உன்முன் நிற்கிறேன். நானும் நெஞ்சம் அழிந்துவாளா இருந்திருந்தால், அவர்களைப் போலவே நானும் அழிந்து போயிருப்பேன். எனக்குச் சக்தி உள்ளவரையில் மனவுறுதி யுடன் முயற்சிசெய்து இக்கடலை நீந்திக் கரைசேரப் பார்க்கிறேன்” என்று கூறினார் போதிசத்துவர்.

இதைக்கேட்ட மணிமேகலா தெய்வம் இவனுடைய உறுதிக்காகவும், முயற்சிக்காகவும் மனம் மகிழ்ந்து இவ்வாறு கூறிற்று: “அச்சத்தைத் தருகிற இந்தப் பெருங்கடலிலே ஊக்கமும் உறுதியும் கொண்டு