உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

யவர்களை நான் நேசிக்கிறேன். உம்முடைய வீட்டில் எனக்கு இடந்தர வேண்டும்” என்று சிரீ கூறினாள்.

அதைக்கேட்ட வணிகன் கூறினான்: “நீர் யாரை நேசிக்கின்றாய்? எப்படிப்பட்டவரை நீ விரும்புகிறாய்? என்பதை எனக்குச் சொல்.”

66

"வெயிலும் காற்றிலும், குளிரிலும் சூட்டிலும், பசியிலும் தாகத்திலும், இரவிலும் பகலும் தமது கடமைகளைச் செய்து முடிக்கிறவர்களை நான் விரும்பி நேசிக்கிறேன்.

وو

"பொறுமையும் நட்பும், நேர்மையும் தாராளமும், வஞ்சக மின்மையும் நாணயமுடைமையும், முயற்சியும் வீரமும், அடக்க மும் மேன்மையும் உள்ளவர்களிடத்தில் பழகுகிறேன்.

66

'நண்பரையும் நண்பர் அல்லாதவரையும், நல்லவரையும் கெட்டவரையும், உதவி செய்கிறவரையும் உதவி செய்யாத வரையும் அன்பாக நேசித்துக் கொடுஞ்சொல் கூறாதவரை நான் நேசிக்கிறேன். ஆனால், என் அன்பைப் பெற்ற யாரேனும் கர்வமும் அகம் பாவமும் உள்ள மூடராக இருந்தால், அப்படிப்பட்ட குறும்பர்களின் அழுக்குக் கறை என்மேல் படாதபடி அவர்களை விட்டு அகன்று போவேன்.'

66

66

"அவரவருடைய செல்வமும் வறுமையும் அவரவர்களாலே உண்டாக்கப்படுவன; மற்றவர்களால் உண்டாக்கப்படுவன அல்ல. செல்வமும் வறுமையும் ஒருவர் மற்றவர்களுக்காக உண்டாக்க முடியாது.”இவ்வாறு சிரீதேவி போதிசத்துவருக்கு விடை யளித்தாள்.

போதிசத்துவர் இந்த விடையைக் கேட்டு மகிழ்ச்சி யடைந்தார். "உனக்குத் தகுதியான இருக்கையும், படுக்கையும் இதோ இருக்கின்றன. நீ அங்கு உட்காரவும் படுக்கவும் செய்ய லாம்” என்று கூறினார். சிரீ அங்குத் தங்கியிருந்தாள். அடுத்தநாள் காலையில், சதுர்மகாராஜிகர் இருக்கும் விண்ணுலகத்துக்குப் போய், அனோதத்த ஏரியிலே முதல் நீராடினாள். சிரீமகள் படுத்த படுக்கை சிரீசையம் என்று பெயர்பெற்றது. அதிருந்து சிரீசயனம் என்னும் சொல் உண்டாகி இப்போதும் வழங்கப் படுகிறது.

66

அக்காலத்தில் சிரீமகளாக இருந்தவள் உப்பலவன்னை. சுசிபரிவாரன் என்னும் வணிகனாக இருந்தவன் நானே” என்று பகவன் புத்தர் பிறப்பு ஒப்புமை கூறினார்.