உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

69

நிறமான வெளிச்சத்தைக் கண்ட வணிகன் அப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் காள கன்னியைக் கண்டான். அவனுடைய கண்களுக்கு அவள் வெறுப்பாக வும், விகாரமாகவும் காணப்பட்டாள். அப்போது வணிகன் கூறினான்: “கறுப்பாகவும் விகாரமாகவும் காணப்படுகிற நீ யார்? உன் பெயர் என்ன? நீ யார் மகள்?” காளகன்னி கூறினாள்: “நான் விரூபாக்க மகா ராஜனுடைய மகள். என்னுடைய பெயர் காளகன்னி. நான் துர திஷ்டத் தின் தேவதை உம்முடைய வீட்டில் எனக்கு இடந்தர வேண்டும்.'

“உன் இயல்பு என்ன? உன்னுடைய நடத்தை யாது? எத்தகையவர் களிடம் நீ பழகினாய்? என்பதை எனக்குக் கூற வேண்டும்” என்றான் வணிகன்.

66

'கபடம், வஞ்சகம், பொறமை, குறும்பு, பேராசை, துரோகம் ஆகிய குணமுடையவர்களிடம் நான் நெருங்கிப் பழகுகிறேன். அத்தகையவர்களை நான் நேசிக்கிறேன். அவர்களை முழுவதும் நாசப் படுத்துவதற்காக அவர்களின் ஊதியத்தைப் பறிக்கிறேன்” என்று கூறினாள். மேலும், காளகன்னி இதைச் சொன்னாள்: “சினத்தையும், பகைமையையும், பழி கூறுவதையும், கலகத்தையும்,அவதூறு பேசு வதையும், கொடுமை செய்வதையும் நான் விரும்புகிறேன். நல்லதை யறியாத. நற்புத்தி கேளாத, நல்ல நண்பர்களை ஒதுக்கித் தள்ளுகிற துர்ப்புத்தியுள்ளவர்களை நேசித்து நட்புக்கொள்கிறேன்.

இதைக்கேட்ட சுசிபரிவாரன் கூறினான்: "காளியே! இவ் டத்தை விட்டுப் போய்விடு. உனக்கு விருப்பமானது இங்கு ஒன்றும் இல்லை. வேறு நாட்டுக்கு, அயல்தேசத்துக்குப் போய்விடு.'

,,

"ஆம் உண்மைதான். எனக்குப் பிடித்தமானது இங்கு ஒன்றும் இல்லைதான்” என்று சொல்லிக் காளகன்னி போய் விட்டாள்.

காளகன்னி போனபிறகு, சிரீ என்னும் தெய்வ மகள் பொன் னிறமான ஆடை அணிந்து பொன்னிறமான அணிகலன்களைப் பூண்டு வணிகன் இருக்கும் இடத்திற்கு வந்து, பொன்னிறமான ஒளியை வீசி நின்றாள். பொன் நிறமான வெளிச்சத்தைக் கண்டவுடன் போதி சத்துவர் திரும்பிப் பார்த்தார். அங்குச் சிரீ என்பவள் நிற்பதைக் கண்டு, இவ்வாறு கூறினார்: “திவ்விய ஒளியோடு இங்கு நிற்பது யார்? உன் பெயர் என்ன? நீ யார்? நீ யார் மகள்?”

66

'நான் திருதராட்டிரன் என்னும் அரசனுடைய மகள். அதிர்ஷ்டத்திற்கும் செல்வத்திற்கும் நான் தெய்வம். அறிவுடை