உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

குளிப்பதற்குப் பல துறைகள் இருந்தன. புத்தர்கள், பிரத்யேக புத்தர்கள், அர்கந்தர்கள், தேரர்கள் முதயவர்கள் குளிப்பதற்குத் தனித் தனியே துறைகள் இருந்தன. ஆறு வகையான காமலேகத்துத் தேவர்கள் குளிப்பதற்கும் வெவ்வேறு துறைகள் இருந்தன.

66

இந்தத் தெய்வ மகளிர் இருவரும் இங்கு வந்து யார் முதல் குளிப்பது என்பது பற்றித் தமக்குள் சச்சரவு செய்து கொண்டார்கள். 'உலகத்தை நான் ஆட்சி செய்கிறேன். ஆகையால், நான்தான் முதல் நீராடவேண்டும்” என்று காள கன்னி கூறி னாள். “மனிதருக்குத் தலைமைப் பதவியைத் தருகிற நன்னடத்தைக்கு நான் தலைமை தாங்கு கிறேன். ஆகையால் நான்தான் முதல் நீராடத் தகுதியுள்ளவள்” என்று சிரீ கூறினாள். பிறகு அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “நான்கு மன்னர்களும் நம்மில் யார் முதலில் நீராடவேண்டியவர் என்பதைக் கூறு வார்கள்” என்று சொல்லி, அவர்கள் சதுர் மகாராஜர்களிடம் போனார்கள். போய், தங்களில் யார் அனோதத்த ஏரியில் முதலில் நீராடத்தகுந்தவர்கள் என்பதைச் செல்லும்படிக் கேட்டார்கள். திருதராட்டிர அரசனும் விரூபாக்க அரசனும், “எங்களால் தீர்ப்புச் சொல்ல முடியாது என்று சொல்லி விரூளாக்கன், வெசவணன் என்னும் அரசர்களிடம் போய்க் கேட்கும்படிச் சொன்னார்கள்.

அவர்களிடம் சென்று கேட்டபோது. "எங்களால் தீர்ப்புச் சொல்ல முடியாது. நமது பெருமானடிகளிடம் போய்க் கேளுங்கள் என்று சொல்லி, சக்கனிடம் அவர்களை ள அனுப்பினார்கள். இவர்களுடைய வழக்கைக்கேட்ட சக்கன் (இந்திரன்), “நீங்கள், எனக்குக்கீழ் அரசாட்சி செய்கிற அரசர்களின் மக்கள். இந்த வழக்கை என்னால் தீர்க்க முடியாது” என்று சொல்லி, இந்த யோசனையைக் கூறினார். “காசி நகரத்திலே சுசி பரிவாரன் என்னும் பெயருள்ள வணிகன் இருக்கிறான். அவனுடைய வீட்டில் ஒருவரும் உபயோகப் படுத்தாத ஆசனமும் படுக்கைவும் இருக்கின்றன. உங்களில் யார் அவற்றில் உட்காரவும் படுக்கவும் இடம் பெறுகிறீர்களோ, அவர்களே முதலில் நீராடத்தக்கவர்.”

பூண்டு

இதைக்கேட்ட உடனே காளகன்னி, நீலநிற ஆடை அணிந்து நீலநிற அணிகலன்களைப் விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத் துக்கு விரைவாக இறங்கி வந்தாள். வந்தவள் காசி நகரத்தில் வணிகன் இருக்கும் மாளிகையில் அவன் படுத்திருக்கும் இடத்தில் நள்ளிரவில் வந்து நீலநிறமான ஒளியை வீசினாள். நீல