உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சிரீகாள கன்னி ஜாதகம்

ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது, அனாத பிண்டிகளைப் பற்றிப் பகவன் புத்தர் இந்தக் கதையைச் சொன்னார். புத்தருடைய உபதேசத்தைக் கேட்டுப் பௌத்தனான பிறகு, அனாதபிண்டிகள் பஞ்ச சீலத்தின்படி ஒழுகி அதைத் தவறாமல் நடந்துவந்தார். அவனுடைய மனைவியும் மக்களும் வேலைக்காரர்களும் அவ்வாறே ஒழுகி வந்தனர். பிக்குகள் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பகவன் புத்தர் அவ்விடம் வந்தார். அவர்கள் பேசுவது இன்ன தென்பதை அறிந் தார். அப்போது இந்தக் கதையை அவர்களுக்குச் சொன்னார்.

நெடுங்காலத்துக்கு முன்பு, பிரமதத்தன் அரசாண்ட காலத்தில், காசியிலே போதி சத்துவர் வணிகனாகப் பிறந்தார். அவர் தானங்கள் செய்து சீலத்தில் நின்று அறநெறிப்படி நடந்து வந்தார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும் பெண்களும் அவ்வாறே பஞ்சசீலத்தைக் கடைப்பிடித்து ஒழுகினார்கள். அவருடைய ஊழியர்களும் வேலைக் காரர்களுங் கூட அவரைப் போலவே அறவொழுக்கத்தில் நடந்தனர். ஆகையினாலே அந்த வணிகருக்குச் சுசிபரிவாரர் என்னும் பெயர் ஏற்பட்டது. அவர் தமக்குள் இவ்வாறு எண்ணினார்: 'யாரேனும் நம்மை விட ஒழுக்க சீலர்கள் வந்தால், அவர்கள் இருக்க என்னுடைய இருக்கையையும், படுக்க என்னுடைய படுக்கையும் உதவுவது கூடாது அவர்களுக்குப் புதிய இருக்கையையும், புதிய படுக்கையையும் கொடுத்து உதவவேண்டும்.' இவ்வாறு எண்ணிய அவர் தமது இல்லத்தில் ஒரு அறையில் தூய ஆசனத்தையும், தூய படுக்கையையும் அமைத்து வைத்தார்.

நான்கு திசைகளுக்கு அரசர்களாகத் தேவலோகத்திலே நான்கு தெய்வ அரசர்கள் உண்டு. அவர்களில் திருதராட்டிரன் வடக்குத் திசைக்கு அரசன்; விரூளாக்கன் தென்திசைக்கு அரசன்; விரூபாக்கன் மேற்குத் திசைக்கு அரசன்: வெசவணன் கிழக்குத் திசைக்கு அரசன். ஒருநாள் விரூபாக்க அரசனுடைய மகள் காள கன்னியும், திருதராட்டிரன் மகள் சிரீயும் பூமாலைகளையும், வாசனைச் சுண்ணங்களையும் எடுத்துக்கொண்டு அனோதத்தம் என்னும் ஏரியில் குளிக்கச் சென்றார்கள். அந்த ஏரியிலே