உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 11

-

மையினால், சக்கனுடைய (இந்திரனுடைய) பளிங்குச் சிம்மானம் சூடு கொண்டது. “என் பதவியிலிருந்து என்னை இறக்குபவர் யார்?” என்று எண்ணிச் சக்கன் ஊன்றிப் பார்த்தபோது, சக்கன் போதிசத்துவர் தவம் செய்வதை அறிந்தான். “ஏன் அந்தத் துறவி தவம் செய்கிறான்? சக்க (இந்திர) பதவிக்காகவா அல்லது வேறு காரணத்துக்காகவா? இதை அறிய வேண்டும். காரைக்கீரையை நீரில் வேகவைத்துத் தின்று மிகுந்த துன்ப மான நிலையில் வசிக்கிறான். இவன் சக்க பதவியை விரும்பினால் இவனுடைய வெந்த கீரையை எனக்குக் கொடுப்பான். இல்லையானால், தரமாட்டான்' என்று தனக்குள் சக்கன் எண்ணிக்கொண்டு பார்ப்பனன் போல உருமாறிப் போதிசத்துவரிடம் சென்றான்.

போதிசத்துவர் காரைக்கீரையைச் சமைத்து, ஆறினபிறகு அருந்தலாம் என்று எண்ணிக்கொண்டு குடிசைக்கு வெளியே வந்து உட்கார்ந்தார். அவ்வமயம் சக்கன் அவர் எதிரிலே வந்து பிச்சை கேட்டுக்கொண்டு நின்றான். போதிசத்துவர் பிச்சைக் காரனைக் கண்டு, மனத்தில் மகிழ்ச்சியடைந்தார். 'மகிழ்ச்சி! பிச்சைக்காரன் வருகிறான். இன்று ஒருவனுக்கு உணவு கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டது” என்று நினைத்தார். உள்ளே சென்று தன் உணவாகிய கீரையைப் பாத்திரத்தில் கொண்டுவந்து, சக்கனிடம் சொன்னார்: “இதுதான் என்னிடம் உள்ள உணவு இதைப் பெற்றுக்கொள்க” என்று கூறித் தனக்கு வைத்துக் கொள்ளாமல் அதைக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட பார்ப்பனன், சிறிதுதூரம் சென்று மறைந்துவிட்டான்.

போதிசத்துவர் அன்று வேறு இலைக்கறி சமைக்கவில்லை. தாம் ருவனுக்குப் பிச்சை கொடுத்த மகிழ்ச்சியினால் அன்று உணவு கொள்ளவில்லை. மறுநாளும் அவர் காரைக்கீரையைச் சமைத்து வைத்துவிட்டு வெளியே வந்து அமர்ந்தார். சக்கன் முன் போலவே பார்ப்பனன் உருவத்தில் வந்து பிச்சைக் கேட்டான். இன்றும் போதி சத்துவர் தமக்கென இருந்த உணவு முழுவதையும் அவனுக்குக் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் இருந்தார். அடுத்த நாளும் அவர் பிச்சை கொடுத்தார். 'அற்பமான கீரையாக இருந்தாலும், அதுவும் தானம் செய்து புண்ணியம் பெற உதவுகிறது' என்று நினைத்துத் தமக்குள் மகிழ்ச்சியடைந்தார்.