உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

கண்ணை மட்டும் கொடுக்காதீர்” என்று அவர்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களின் வேண்டுகோளைக் கேட்டுக் கொடை வேந்தன் கூறினார்: “கொடுப்பதாக வாக்களித்துப் பிறகு அவ்வாக்கை நிறை வேற்றாதவன் கழுத்தைப் பாசக்கயிற்றினால் இறுக்கிச் சுருக்கிட்டுக் கொல்லும் அறக்கடவுள். கொடுப்பதாக வாக்களித்துப் பின்னர் மாட்டேன் என்று மறுக்கிற பாவி நரகத்திற்குச் செல்கிறான். வேண்டாத பொருளை வழங்குவதனால் யாது பயன்? பிராமணன் விரும்பிக்கேட்ட பொருளையே கொடுக்க இசைந்தேன். நீங்கள் தடை செய்யாதீர்கள்.

و,

அப்போது அமைச்சரும் சுற்றத்தாரும் அரசர் பெருமானை இவ்வாறு கேட்டார்கள்: “கண்கெட்ட பிறகு அரசர் பெருமான் எதை விரும்பு கிறார்? அழகு, உடல்நலம், இன்ப வாழ்வு, நீண்ட நாள் வாழ்க்கை இவை களைப்பெற விரும்புகிறாரா? பேரும் புகழும் பெற விரும்புகிறாரா? அல்லது மறுமையில் கிடைக்கப்போகிற சுவர்க்கபோகத்தின் பொருட்டுப் பெருமானடிகள் கண்ணைத் தானம்செய்ய விரும்புகிறாரா?”

அரசர் கூறினார்: “கண்ணைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறு எதையும் பெறுவதற்கு நான் நினைக்கவில்லை. பேருக்காகவும், புகழுக் காகவும், விண்ணுலக போகத்துக்காகவும் அல்ல நான் தானம் வழங்குவது. நான் அறவிலை வாணிகம் செய்யவில்லை. பிரதிபலனை எதிர்பாராமல், என்னிடம் உள்ள சிறந்த பொருளைத் தானமாக வழங்க வேண்டும் என்னும் ஒரே கருத்துடன்தான் கண்ணைக் கொடுக்கிறேன்.”

இதைக் கேட்டபிறகு, அமைச்சரும் சுற்றத்தாரும் மேலும் பேசாமல் வாளா இருந்தனர். அப்போது சிவி மன்னர் மருத்துவரிடம், “சீவகரே! நீர் எமக்கு நண்பரும் அன்பருமாக இருக்கிறீர். நாம் கூறுவது போலச் செய்யும். எமது கண்ணை வெளியே எடுத்து இந்தக் குருடன் கையில் கொடும். இதுவே எமது மனமுவந்த விருப்பம்”என்று கூறினார்.

சீவக மருத்துவர் அரசரைப் பணிந்து கூறினார்: “பெருமானே! சிந்தித்துக் கூறுங்கள். கண்ணைக் கொடுப்பது எளிதான காரியம் அன்று.

"சீவக! நன்றாகச் சிந்தித்துப் பார்த்த பிறகுதான் சொல்லு கிறோம். தாமதம் செய்ய வேண்டாம். நாம் சொல்லியபடி செய்க.

"

அப்போது சீவகர், 'என்னைப்போன்ற மருத்துவக் கலையில் தேர்ந்தவர், அரசருடைய கண்ணை ஆயுதத்தினால் தோண்டி எடுப்பது