உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

இவர்கள் அறியார். ஏதோ அழுக்கடைந்த பித்தளைத் தட்டு என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். பேராசைக்காரக் கன்னான், “ஓட்டை உடைசல் சாமான்கள் வாங்குகிறது, ஓட்டை உடைசல் சாமான் வாங்குகிறது" என்று கூவிக்கொண்டே இவர்கள் வீட்டண்டை வந்தான். அப்போது பேத்தி பாட்டியைப் பார்த்து, "பாட்டி காதுக்குப் போட்டுக் கொள்ள ஏதேனும் நகை வாங்கிக்கொடு” என்று கேட்டாள்.

"நம்மிடம் காசு ஏது, கண்ணே! எதை விற்றுக் காசு பெறுவது?”

66

“ஏன் அந்தப் பழைய தட்டு இருக்கிறதே. அது நமக்கு ஏன்? அதைக் கொடுத்துக் காசு வாங்கலாம்.'

பாட்டி கன்னானை வீட்டில் அழைத்து அவனிடம் பழைய தட்டைக் கொடுத்து, “இதை எடுத்துக்கொண்டு ஏதேனும் காசு கொடு ஐயா!” என்றாள்.

பேராசைக்காரக் கன்னான் தட்டைக் கையில் வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தான். அது பொன் தட்டு என்று ஐயம் உண்டாகவே, அதை ஒரு ஓரத்தில் ஊசியினால் கீறினான். அது உண்மையாகவே பொன் தட்டு என்பதை அறிந்தான். உண்மையை அவர்களுக்குத் தெரிவிக்காமல் அவர்களை ஏய்க்க எண்ணினவனாய்,” இது என்ன தட்டு? அரைக்காசு பெறாது" என்று சொல்லி அதைத் தரையில் எறிந்து விட்டு எழுந்து வீட்டைவிட்டுப் போய்விட்டான். கன்னார் செய்துகொண்ட ஒப்பந்தப் படியே, நகரத்தின் ஒரு பகுதியைச் சுற்றிவிட்டு, போதி சத்துவராகிய கன்னான் இந்தப் பகுதிக்கு வந்தார். அவர் கிழவியின் வீட்டுப்பக்கமாக, ஓட்டை உடைசல் சாமான் வாங்குகிறது, ஓட்டை உடைசல் வாங்குகிறது" என்று கூவிக்கொண்டு வந்தார். அப்போது பேத்தி, பாட்டியிடம் முன்போலவே சொன்னாள். கிழவி, “ஏன் அம்மா! அந்தக் கன்னான் தட்டை போட்டுவிட்டு எழுந்து போய்விட்டானே! விற்பதற்கு வேறு என்ன சாமான் இருக்கிறது?” என்றாள்.

66

66

'அந்த ஆள் கெட்டவன். இந்த ஆள் நல்லவராகத் தெரி கிறார். இவர் இந்தத் தட்டை வாங்கிக்கொள்வார்" என்றாள் சிறுமி.

66

'அப்படியானால் இந்தக் கன்னானைக் கூப்பிடு.'

கன்னான் வந்து உட்கார்ந்தவுடன் பாட்டி பழைய தட்டை அவனிடம் கொடுத்தாள். இது பொன் தட்டு என்பதை அறிந்து அவன் சொன்னார்: “அம்மா! இது ஆயிரம் காசு பெறும். இப்போது என்னிடம் ஆயிரம் காசு கிடையாது.