உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

151

தார்கள். ‘இன்று ஒரு இரவலன் வரப்போகிறான்' என்று எண்ணி அவர் மனம் மகிழ்ந்தார். கள்ளுண்டு வெறி கொண்டவன், மீண்டும் மீண்டும் கள் உண்ண அவாவுறுவது போல, தானங்கொடுத்துக் கொடுத்துப் பழகிய இவர், இரவலன் வரவை எதிர்நோக்கியிருந்தார். பார்ப்பனன் அருகில் வந்ததும், "வருக வருக" என்று கூறி வரவேற்றார். சிறுவ னாகிய ஜாலி அவன் அருகில்போய், "வருக வருக" என்று கூறி கை கொடுத்து அழைத்தான். இவனைத்தான் தானம் பெறப்போகிறோம் என்பதைக் குறிப்பினால் அறிந்த பார்ப்பனன், இவனிடம் அன்பு காட்டக் கூடாது என்று நினைத்து, “போ, போ” என்று சிடு சிடுத்துக் கூறினான். ஜாலி, 'இவன் முரடன் போலும்' என்று எண்ணிய வண்ணம் அப் பார்ப்பனனுடைய உடம்பை நோக்கி னான். அவன் உடம்பிலே பதினெட்டு வகையான அவலக்ஷணக் குறிகள் காணப்பட்டன.

66

பார்ப்பனன் வள்ளலின் அருகில் வந்து வணக்கமாக நின்று, தாங்கள் எல்லோரும் சுகம்தானே? காய்கனிகள், உணவுகள் போதுமானபடி கிடைக்கிறதா? ஈ, கொசு, எறும்பு, வண்டுகளால் துன்பம் இல்லாமலிருக்கிறதா?” என்று கேட்டான்.

"இங்கு எல்லோரும் சுகந்தான். காய்கனிகள் நிறைய உண்டு. ஈ, எறும்பு, புழுப் பூச்சிகள் தொந்தரவு ஒன்றும் இல்லை. தாங்கள் பசியோடு இருக்கிறீர்கள். இந்தப் பழங்களை அருந்தி நீரைக் குடித்து அலுப்புத் தீருங்கள்” என்று கூறி வள்ளல் உபசாரம் செய்தார். பிறகு, 'இந்தக் காட்டில் இந்தப் பிராமணன் காரியம் இல்லாமல் வந்திருக்கமாட்டான்' என்று எண்ணி, "தாங்கள் இங்கு வந்த காரியம் என்னவோ?" என்று

வினவினார்.

'பெருமான் அடிகளே! என்றும் வற்றாத ஊருணி நீரைச் சுரந்து கொண்டே மக்களுக்கு வழங்குவதுபோல, கொடை வள்ளலாகிய தாங்கள் எப்போதும் தானம் வழங்கி வருகிறீர்கள். தங்களிடம் இரந்து வேண்டுகிறேன். தங்களுடைய சிறுவர்கள் இரண்டு பேரையும் எனக்குத் தானமாக வழங்க வேண்டுகிறேன்.

66

ஐயுற வேண்டாம். என்னுடைய மக்களைத் தானமாக வழங்குவேன். சற்று இரும். மாலையானதும் இவர்களின் தாயார் வருவாள். வந்து இவர்களை நீராட்டிப் பூச்சூட்டுவாள். பிறகு இவர்களை உமக்குத் தானமாக வழங்குவேன்.