உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

153

சொன்னவுடன், அவர்களுக்குக் குறிப்புக் காட்டி வெளியே அனுப்பி விட்டு, ஒன்றும் அறியாதவர்போல இருக்கிறீர், தங்களைப் போன்ற வாக்குத் தவறுகிறவர்களை நான் கண்டது இல்லை.

இதைக்கேட்டு, வெசந்தரகுமாரன் மனம் சலித்தார். சிறுவர்கள் அவ்விடத்தில் இல்லாததைக் கண்டார். “அப்படி நினைக்க வேண்டாம். அவர்களைத் தேடி அழைத்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லி, சிறுவர்களைத் தேடிச்சென்றார். குடிசைகளின் பின்புறம் போய்ப் பார்த்தார். அங்கு இல்லாததைக் கண்டு, காட்டில் ஓடியிருப்பார்கள் என்று நினைத்துக் காலடிச் சுவடுகளைப் பார்த்துக்கொண்டே போய்க் கடைசியில் ஏரியருகிதல் வந்தார். அங்குச் சிறுவர்கள் தண்ணீரில் இறங்கிய காலடிச் சுவடுகளைக் கண்டு, ஏரியில் ஒளிந்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்து, “ஜாலி, ஜாலி, குழந்தாய்! ஜாலி” என்று கூவியழைத்தார்.

நீரில் ஒளிந்திருந்த ஜாலி தனக்குள், 'பார்ப்பான் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அப்பாவின் சொற்படி நடக்க வேண்டும்' என்று எண்ணி ஏரியிலிருந்து கரைக்கு வந்து தந்தையின் காலில் விழுந்து அவருடைய வலதுகாலைப் பிடித்துக்கொண்டு அழுதான். “ஜாலி, உன் தங்கை எங்கே?” என்று கேட்டார் தகப்பனார். “அச்சங் கொண்டவர், புகலிடம் நாடிச் செல்வது இயற்கைதானே?" என்றான் ஜாலி.

66

கண்ணா! கண்மணி கண்ணா! எங்கிருக்கிறாய்?" என்று அழைத்தார் தந்தையார். 'அப்பா அழைக்கிறார். அவர் சொற்படி நடக்கவேண்டும்' என்று தனக்குள் எண்ணிக்கொண்டு சிறுமி நீரிலிருந்து கரைக்கு வந்து அப்பாவின் காலில் விழுந்து இடது காலைப் பிடித்துக் கொண்டு அழுதாள். வெசந்தர மன்னனின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிறுவர்களின் பொன் நிறமான முதுகில் விழுந்தன. அவர்களைத் தூக்கி நிறுத்தி ஆறுதல் கூறினார்: “ஜாலி, தானபாரமிதையின் உச்ச நிலையை இன்று நான் அடையப்போகிறேன். தானம் கொடுக்கும்போது மகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா?” என்று கூறினார். பிறகு ஆடு மாடுகளுக்கு விலை கூறுவது போல, அவர்களுக்கு விலையையும் கணித்தார். "ஜாலி, நீ பிராமணனிடமிருந்து விடுதலை பெறவேண்டுமானால், ஆயிரம் காணம் கொடுத்து விடுதலை பெறவேண்டும். உன் தங்கை மிகவும் அழகானவள். அவளை எவரும் மணம் செய்ய வருவார்கள்.