உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

-

கலைத் துரோகிகள்

நமது நாட்டுக் கலைப்பொருளைக் களவாடி ஐரோப்பியருக்கு விற்றுப் பதினாயிரக் கணக்காகவும் இலட்சக்கணக்காகவும் பொருள் தேடியவர்கள் இன்னும் நமது நாட்டில் இருக்கிறார்கள். நமது நாட்டுக் கோயில்களிலேயுள்ள கலைச் செல்வங்களைக் களவாடிய, அல்லது களவு செய்வதற்கு உடன்பட்டிருந்த, அல்லது களவாடிய

பொருள்களை வாங்கிவிற்ற குற்றத்திற் குட்பட்டவர்களான இவர்கள், நாட்டின் கலைத் துரோகிகளாகிய இவர்கள், பெரிய மனிதர்களாகவும் பட்டம் பதவி பெற்றவர்களாகவும் இன்றும் வாழ்கிறார்கள். இவர்கள் மூலமாக நமது நாட்டிலிருந்து பழைய கலைச் செல்வங்கள் எத்தனையோ மேல் நாடுகளுக்குப் போய் விட்டன. இவையெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்றன.

சட்டம்

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இந்தியக் கலைப் பொருள்கள் அயல் நாட்டிற்கு அனுப்பப்படக் கூடாது என்னும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இனி நமது கலைப் பொருள்கள் அயல் நாட்டிற்குப் போக வழியில்லை, ஆயினும் கள்ளத்தனமாகப் போகக்கூடும் அல்லவா?

நமது கடமை

கலைச் செல்வங்களை அயல்நாட்டுக்கு விற்கும் கலைத் துரோகிகள் - நாட்டுத் துரோகிகள் - இன்னும் கலைப் பொருள்களை அயல்நாடுகளுக்கு அனுப்பத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தமது சொந்த கலைப்பொருள்களை விற்றாலும் நாம் குறை கூறமாட்டோம். ஆனால், தேசத்திற்கும் நாட்டிற்கும் உரியதான கலைப்பொருள்களை வஞ்சகமாகவும் சூதாகவும் தமக்குச் சொந்தப் பொருளாக்கிக் கொண்டு அவற்றை வெளிநாடுகளில் விற்றுப் பணம் சேர்ப்பது என்றால், அதை மக்களும் அரசாங்கமும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா என்பதே எமது கேள்வி.

"

காஞ்சீபுரத்து நடராசர்

காஞ்சீபுரம், தஞ்சாவூர் முதலிய இடங்களிலிருந்த பல கலைச்செல்வங்கள் இவ்வாறு அயல்நாடுகளுக்குப் போய்விட்டன. காஞ்சீபுரத்தில் பேர்போன பல்லவர் கோயில் ஒன்றில் இருந்த புராதன