உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

6

37

வியங்கள் இருந்ததைக் கண்டேன். அவை பார்வதி பரமேசுவரர், இலக்குமி, கலைமகள் முதலிய சித்திரங்களாகும். சிறிது அழிந்து போயிருந்தாலும் பெரிதும் நன்னிலையிலே யிருந்தன. வர்ணங்கள் அழிந்துபோன இடங்களில் கோடுகள் புனையா ஓவியமாக நிறைவு செய்திருந்தன. அவை பிற்காலத்து ஓவியங்கள்தான். 400, அல்லது 500 ஆண்டு பழைமையிருக்கலாம். அவற்றை நிழற்படம் ‘போட்டோ' பிடிக்க வேண்டுமென்று அடுத்த ஆண்டு சென்றபோது, அந்தோ! அவை மறைந்து போனதைக் கண்டு துணுக்குற்றேன். கோயில் அதிகாரிகள் அந்தச் சித்திரங்களின் மேலே கோபி சுண்ணாம்பை நிறையப் பூசி மண்டபத்தை ‘அழகு' செய்திருந்தார்கள்! அவர்கள் நீடூழி வாழ்க!!

படிஎழுதி வைக்கலாம்

இவ்வாறு எந்தெந்தக் கோயில்களில் எத்தனை எத்தனை ஓவியங்கள் அழிந்தனவோ! ஓவியத்துக்கும் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கோயில் “தர்மகர்த்தர்கள்” நினைக்கிறார்கள் போலும்! அதிலும் அரைகுறையாக உள்ள சித்திரங்கள், குற்றுயிராய்க் கிடந்து வேதனைப் பட்டுக் கொண்டிருப்பதைவிட அடியோடு அழிந்து சுகம் பெறட்டும் என்னும் கருணையினால் “கொன்று" விடுகிறார்கள் போலும். அரைகுறையான ஓவியங் களாக இருந்தாலும் அவற்றையும் போற்றவேண்டும். அவற்றை அழிக்க வேண்டியிருந்தால் முதலில் அவற்றைப் படம் பிடித்து வைத்துக்கொண்டு அல்லது படி எழுதிவைத்துக்கொண்டு பிறகு அழித்துவிடலாம்.

நமது நாட்டிலே பழைய கோயில்கள் பல உள்ளன. தேடிப் பார்த்தால் அவைகளிலும் சில ஓவியங்கள் காணப்படலாம். பிற்காலத்துச் சித்திரங்களாக இருந்தாலும் அவை பாதுகாக்கப்பட வேண்டும். திருவலஞ்சுழி கோயில் மிகப் பழமையானது. அக் கோயிலிலும் ஓவியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை நகல் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அன்பர்களை வணக்கமாக வேண்டிக்கொள்வது என்ன வென்றால், ஏதேனும் ஓவியங்கள் கோயில் முதலிய பழைய கட்டிடங்களில் இருக்கக் கண்டால், அவற்றை அழியவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே. கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள்,