உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

சிதைந்த ஓவியம்

-

மறைந்துபோன சித்திரங்கள் போக, இப்போதும் சிற் சில கோயில்களிலும் மண்டபங்களிலும் சிதைந்துபோன ஓவியப் பகுதிகள் இன்றுங் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் கிடைத்த வரையில், அரைகுறையாக இருந்தபோதிலும், போற்றிப் பாதுகாக்க வேண்டும். பிரதிகள் எழுதி, அல்லது நிழல் (போட்டோ) படம் பிடித்து பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். இதற்கு ஓவியக் கலைஞரும், நிழற் படம் பிடிப்போரும், அரசாங்கத்துப் பழம் பொருள் ஆராய்ச்சித் துறையினரும் இலாகா) முன்வந்து உதவி செய்யவேண்டும்.

(ஆர்க்கியாலஜி

திருமலை ஓவியம்

வட ஆர்க்காடு மாவட்டம் வடமாதிமங்கலம் இரயில் நிலையத் திற்கு அருகில் உள்ள போளூர் திருமலை என்னும் குன்றின்மேலே ஜைனக் கோயில் ஒன்று உண்டு. இதற்குச் சிகாமணிநாதர் கோயில் என்பது பெயர். இக்கோயில் குகையில் சோழர்காலத்து ஓவியங்கள் இப்போது சிதைந்து அழிந்து காணப்படுகின்றன. (புதிதாக எழுதப்பட்ட காலச் சித்திரங்களும் இங்கு உண்டு. இவற்றை நான் கூற வில்லை) இப்பழைய சித்திரங்களை அரசாங்கத்துப் பழம் பொருள் ஆராய்வோர் (ஆர்க்கியாலஜி இலாகா) சில ஆண்டுகளுக்கு முன்னர் படம் பிடித்தார்கள். அந்தப் படங்களின் நகல்கள் வேண்டுமென்று கேட்டபோது அவை கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள் காரணம் என்னவென்றால் படமெடுக்கப்பட்ட 'போட்டோ நெகிடிவ்' உடைந்து விட்டதாம். அதன் பிறகு அவர்கள் மீண்டும் படம் பிடிக்கவில்லை. இக்கோயில் ஓவியங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன.

காஞ்சி ஓவியம்

காஞ்சீபுரத்து ஏகாம்பரேசுவரர் கோவில் பௌர்ணமி மண்டபத்தில் அன்னப்பறவைகள் முதலியவற்றின் ஓவியங்கள் எழுதப்பட்ட சிதைவுகள் காணப்பட்டதைச் சில ஆண்டுகளுக்கு முன்னர்க் கண்டேன்.

காஞ்சி ஏகாம்பரேசுவரர் நூற்றுக்கால் மண்டபத்தின் மேல்பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய அளவில் பல