உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

சுப்பிரமணியர் உருவத்தில், தண்டபாணி, பழனியாண்டவர், வேல் முருகர், ஆறுமுகர், மயில்வாகனர் முதலிய பல பிரிவுகள்

உள்ளன.

பதஞ்சலி, வியாக்கிரபாதர், தும்புரு, நாரதர், நந்திதேவர், நாயன்மார்கள் முதலியவர்களின் உருவங்களும் உள்ளன.

வைணவ சமயத் திருவுருவங்களில் நாராயணன், கேசவன், மாதவன், கோவிந்தன், அநந்தசயனன், கண்ணன், பலராமன், இராமன், திரிவிக்ரமன், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் முதலிய பலவிதங்கள் உள்ளன. இலக்குமி, கஜலக்குமி, பூதேவி, ஸ்ரீதேவி முதலிய உருவங்களும், ஆழ்வார்கள் முதலிய உருவங் களும் உள்ளன.

பௌத்த, ஜைன சிற்பங்கள்

பௌத்த சமயத்தில், பலவிதமான புத்தர் உருவங்களும், அவலோகிதர் உருவங்களும் தாரை முதலிய தேவி உருவங்களும் கணக்கற்றவை உள்ளன.

ஜைன சமயத்தில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களும் யக்ஷன் யக்ஷி சாத்தன் முதலிய உருவங்களும் உள்ளன.

இவ்வுருவங்களைப் பற்றிய விளக்கங்களை யெல்லாம் விரிவாக இங்கு எழுதப் புகுந்தால் இடம் பெருகும் என்று அஞ்சி நிறுத்துகிறோம். இவ்வுருவங்களைப்பற்றித் தமிழில் நூல்கள் இல்லாதது குறைபாடு

ஆகும்.

ہے

இயற்கை உருவங்களில், ஆண் பெண் உருவங்களின் அழகிய சிற்பங்களைப்பற்றியும், இலைக்கொடி முதலிய கற்பனைச் சிற்பங்களைப் பற்றியும், விலங்கு பறவை முதலிய சிற்ப உருவங்களைப் பற்றியும் விரிவஞ்சிக் கூறாது விடுகிறோம். சமயம் வாய்ப்பின் இவைகளைப் பற்றித் தனி நூல் எழுதுவோம்.

பிரதிமை சிற்பங்கள்

பிரதிமை உருவங்களைப்பற்றிச் சிறிது கூறி சிற்பக் கலைச் செய்தியை முடிப்போம். பிரதிமை உருவங்கள்° என்பது, தனிப் பட்ட ஆ ளின் உரு உருவ அமைப்பை, உள்ளது உள்ளவாறு அமைப்பது. இந்தக்கலை, மேல்நாட்டு முறைப்படி நமது நாட்டில் வளர வில்லையாயினும், நமது நாட்டு முறைப்படி ஓரளவு வளர்ந்திருந்தது.